by admin on | 2025-01-25 12:54 PM
முல்லைப் பெரியாறு அணை 2015ம்ஆண்டு முதல் பாதுகாப்பில் சிக்கல்
தமிழகத்தில் ஐந்து தென்மாவட்ட மக்களின் குடிநீர் ஆதாரமாக திகழும் முல்லைப் பெரியாறு அணையின் பேபி அணை பலப்படுத்துவதில் தொடர்ந்து கேரளா அரசு சிக்கலை ஏற்படுத்தி வருகின்றது.கடந்த 2015 ஆம் ஆண்டு பேபி அணை பலப்படுத்த பதினைந்து மரங்களை வெட்டுவதற்கு தமிழக அரசு கேட்டுக் கொண்டதன்படி கேரள வனத்துறை அனுமதி அளித்தது.ஆனால் அதனை கேரள அரசு நிறுத்தி வைத்தது.இதனைத் தொடர்ந்து மேற்கண்ட 15 மரங்களை வெட்டுவதில் தமிழக அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுப்பதில் சிக்கல் ஏற்பட்டது.அதேபோல் தொடர்ந்து கேரளா வனத்துறையும் கேரளா அரசும் மாறி மாறி தயக்கம் காட்டி வருவதால்.பேபி அணை பலப்படுத்துவதில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் தொடர்ந்து கேரளா அரசு மீது குற்றம் சாட்டி வருகின்றனர்.தற்போது மீண்டும்கேரளா வனத்துறைஅனுமதி கோரி மீண்டும் தமிழக அரசை கடிதம் எழுத கூறியுள்ளது.இந்நிலையில் தற்போது தேக்கடி பகுதியில் மெயின்டனன்ஸ் ஒர்க் செய்வதற்கு அனுமதி வழங்க சிறுநீர் பாசனத்துறையில் அனுமதி பெற வேண்டுமென புது உத்தரவை கேரளா வனத்துறை மற்றும் கேரளா அரசு கூறியுள்ளது.இது போன்ற தொடர்ந்து சிக்கலை ஏற்படுத்தி வருகின்றது தமிழக மக்களைபோராட தூண்டுவதாக உள்ளது.இதனை தமிழக அரசு உடனடியாக தடுத்து நிறுத்தி பேபி அணை மற்றும் தேக்கடி பகுதியில் தமிழக அதிகாரிகளை பணி செய்ய நிபந்தனை விதிப்பதை தடுக்க வேண்டும்
திருப்பி அடிக்க திமுக ரெடி....!!!! விரட்டி அடிக்க விஜய் ரெடி..!!! கட்டுரையாளர் பாண்டியராஜ்...!!!
நீதிபதியின் கண்டிப்பு - அருணை தூக்கி அடித்த விஜய்! லஞ்ச ஒழிப்புத் துறைக்கு புதிய தலைவர் - யார் இந்த மகேஸ்வரி. ?
தனக்கு அரசியல் தெரியாது என்பது முதல்வர் விஜய்க்கு தெரியும்...!!! கட்டுரையாளர் மா பாண்டியராஜ்....!!!!
திண்டுக்கல் - கோவை நெடுஞ்சாலையில் டோல்கேட் திறப்பு ! பொதுமக்கள் கடும் எதிர்ப்பு - திறப்பு நிறுத்திவைப்பு!
அதிரடி காட்டும் தேனி எஸ் பி....!!! பொது மக்களிடம் நல்ல வரவேற்பு...!!!