by Vignesh Perumal on | 2025-04-06 08:31 AM
அருள்மிகு பஞ்சமுக ஆஞ்சநேயர் கோயில்,
கோயிலின் சிறப்புகள்: இந்த கோயிலில் ஆஞ்சநேயர் ஐந்து தலைகளுடன் 36 அடி உயர சிலையாக வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள் புரிகிறார். ஒரு முறை ராமாயணத்தில் இராவணன், மயில்ராவணன் என்ற அசுரனின் துணையுடன் ராமனோடு போர் புரிய வந்தான். ராமரை அழிப்பதற்காக மயில்ராவணன் கொடிய ஒரு யாகத்தை நடத்த எண்ணினான். அந்த யாகம் நடந்தால் ராம, லக்ஷ்மணர்களுக்கு ஆபத்து என்பதை உணர்ந்த விபீஷணன், யாகத்தை தடுத்து நிறுத்த ஆஞ்சநேயரை அனுப்பும்படி ராமரிடம் கூறினான். ராமர் கூறியதன் பேரில் ஆஞ்சநேயர் யாகத்தை தடுத்து நிறுத்த கிளம்பும் முன் நரசிம்மர், ஹயக்கிரீவர், வராகர், கருடன், ஆகியோரை வணங்கி ஆசி பெற்றார்.இந்த தெய்வங்கள் அனைவரும் போரில் அனுமன் வெற்றிபெற தங்களின் உருவ வடிவின் சக்தியை அனுமனுக்கு அளித்தனர். இதன்மூலம் ஆஞ்சநேயர் பஞ்சமுகம் கொண்டு விஸ்வரூபம் எடுத்து மனித குல வாழ்விற்காக மயில் ராவணனை அழித்தார். இந்த விஸ்வரூப ஆஞ்சநேயரையே பஞ்ச முகத்துடன் 36 அடி கொண்ட சிலையாக வடித்துள்ளனர். மேலும் இக்கோயிலில் ராமர் பாலம் கட்ட பயன்பட்ட 8 கிலோ எடையுள்ள மிதக்கும் கல்லையும் நம் காணலாம்.
பலன்கள்: இந்த தலத்தில் உள்ள ஆஞ்சநேயரை வழிபட்டால் ஆஞ்சநேயர், நரசிம்மர், ஹயக்ரீவர், வராஹர் மற்றும் கருடனை வழிபட்ட பலன் கிட்டும் என்பது ஐதீகம்.
இருப்பிடம் மற்றும் போக்குவரத்து: புதுச்சேரியிலிருந்து திண்டிவனம் செல்லும் சாலையில் 10 KM தொலைவில் இந்த ஆலயம் அமைந்துள்ளது. புதுச்சேரியிலிருந்து திண்டிவனம் செல்லும் பேருந்துகளில் செல்லலாம்.
ஒரு கோடி மதிப்பிலான கஞ்சா கடத்தல் - கஞ்சா மற்றும் 2 சொகுசு கார்கள் பறிமுதல், 4 பேர் கைது ! தேனி போலீஸ் அதிரடி !!
"உறவைத் தவிர்த்த கணவர்" - உயிரோடு எரித்து கொலை செய்யப்பட்ட போலீஸ் எஸ்ஐ ! மனைவி கள்ளக்காதலலுடன் சேர்ந்து போட்ட ஸ்கெட்ச் !
மனைவியிடம் ஆபாச பேச்சு - அடங்காத ஆத்திரம் ! 5 ஆண்டுகள் கழித்து பழி தீர்த்த கொடூரம் !! சில மணிகளில் தூக்கிய போலீஸ் !!!
இன்ஸ்பெக்டருக்கு அரிவாள் வெட்டு ! சுட்டுப் பிடித்த போலீஸ் !!
அரசு ஊழியர்களுக்கு ஆப்பு ! த வெ க அரசு அதிரடி !!