by Vignesh Perumal on | 2025-04-05 07:54 PM
அரசாங்க இடத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள மண்டபத்தில் நாளை மருத்துவ முகாமில் மாவட்ட ஆட்சியர் பங்கேற்பதாக விளம்பரம் தொடர்பாக நடவடிக்கை மேற்கொள்ள சமூக ஆர்வலர் ஈ.பி.அ.சரவணன் ஆட்சியருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
அரசு நிலத்தில் கட்டப்பட்டுள்ள மண்டபத்தையும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதையும் முழுமையாக மீட்டெடுக்க வேண்டும். இது தொடர்பாக அவர் மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: 'திருப்பூர் வடக்கு வட்டத்திலுள்ள நெருப்பெரிச்சல் பகுதியில் உள்ள அரசுக்குச் சொந்தமான நிலத்தை, ஆக்கிரமித்து கொங்கு கலையரங்கம் என்ற திருமண மண்டபம் கட்டியுள்ளது தொடர்பாக தொடர்ச்சியாக புகார் அளித்த நிலையில் வருவாய்த்துறையினர் க.ச.எண்: 566 ல் உள்ள நிலங்கள் அரசு ஆவணங்களின்படி அளவீடு செய்ததில், ஓடை புறம்போக்கு நிலத்தில் மண்டபமும் அமைந்துள்ளதை உறுதிசெய்து ஆக்கிரமிப்பை அகற்ற நோட்டீஸ் வழங்கினர் ஆனால் இந்த மண்டபத்தில் நாளை 6ம் தேதி மருத்துவ முகாம் நடத்துவதாகவும் அதில் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அரசு அலுவலர்கள், மக்கள் பிரதிகள் கலந்து கொள்வதாக விளம்பரம் செய்து வருகின்றதால் உடனடியாக இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு நிலத்தில் கட்டப்பட்டுள்ள மண்டபத்தையும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதையும் முழுமையாக மீட்டெடுக்க வேண்டும்.
திருப்பூர் வடக்கு வட்டத்திலுள்ள நெருப்பெரிச்சல் பகுதியில் உள்ள அரசுக்குச் சொந்தமான நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து கொங்கு கலையரங்கம் என்ற திருமண மண்டபம் கட்டியுள்ளது தொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம் எங்களுடைய சங்கம் சார்பாக அளித்த புகாரின் பேரில், திருப்பூர் வடக்கு வட்டத்திலுள்ள வருவாய்துறை அலுவலர்கள் ஆய்வு நடத்தினர்.
அதில் நெருப்பெரிச்சல் கிராமம், க.ச.எண்: 566 ல் உள்ள நிலங்கள் அரசு ஆவணங்களின்படி அளவீடு செய்து, ஆய்வு செய்யப்பட்டது. இதில் ஓடை புறம்போக்கு நிலத்தில் தனியார் கொங்கு கலையரங்கம் என்ற மண்டபமும் அமைந்துள்ளன எனவும் இது தொடர்பாக ஆக்கிரமிக்கப்பாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கி ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதை அகற்ற வேண்டுமென வலியுறுத்தியுள்ளனர். இது தொடர்பாக தொடர்ச்சியாக தினசரி நாளிதழ்களில் செய்திகள் வெளியாகியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
அந்த நிலையில் நாளை 06-04-2025 ம் தேதி மேற்படி அரசாங்க இடத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள கொங்கு திருமண மண்டபத்தில் மருத்துவ முகாம் நடத்துவதாகவும் அதில் மதிப்புக்குரிய மாவட்ட ஆட்சியர் அவர்களும், மக்கள் பிரதிநிதிகளும் கலந்து கொள்வதாகவும் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளிலுள்ள இடங்களில் பிளக்ஸ் பேனர் வைத்துள்ளது மக்கள் மத்தில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
எனவே உடனடியாக இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் உரிய தீர்வுகண்டு மேற்படி அரசாங்க இடத்திலுள்ள ஆக்கிரமிப்புகளை முற்றிலுமாக அப்புறப்படுத்த போர்க்கால அடிப்படையில் விரைவாக தீர்வுகாண வேண்டுமென' அதில் கூறப்பட்டுள்ளது.
ஹார்முஸ் ஜலசந்திக்கு பை.... பை .......! ரூட்டை மாற்றிய இந்தியா !!
பணி புரியும் கிராமத்திலேயே விஏஓ க்கள் தங்க வேண்டும்...!! இல்லை என்றால் புகார் தெரிவிக்கலாம்...!!!
விசாரணை கைதி மரணம் ! உடலை வாங்க மறுப்பு !!
திருப்பி அடிக்க திமுக ரெடி....!!!! விரட்டி அடிக்க விஜய் ரெடி..!!! கட்டுரையாளர் பாண்டியராஜ்...!!!
நீதிபதியின் கண்டிப்பு - அருணை தூக்கி அடித்த விஜய்! லஞ்ச ஒழிப்புத் துறைக்கு புதிய தலைவர் - யார் இந்த மகேஸ்வரி. ?