by admin on | 2026-07-23 11:23 AM
தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில்
பணி புரியும் ஆசிரியர்களுக்கு டெட் தேர்வை ரத்துசெய்ய வலியுறுத்தி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம் .
ஆண்டிபட்டி வட்டார கல்வி அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான ஆண் பெண் ஆசிரியர்கள் பங்கேற்பு
டெட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி
ஆண்டிபட்டி வட்டார கல்வி அலுவலகம் முன்பு தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
ஆர்ப்பாட்டத்திற்கு வட்டாரத் தலைவர முருகானந்தம் தலைமை தாங்கினார் . மாவட்டச் செயலாள் சரவணமுத்து நிறைவுரையாற்றினார். .
ஆர்ப்பாட்டத்தில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு டெட் தேர்வை முழுமையாக ரத்துசெய்ய வேண்டும்
டெட் தேர்வை ரத்து செய்யும் சட்ட திருத்தத்தை வருகின்ற நாடாளுமன்ற கூட்டத்தில் மத்திய அரசு தாக்கல் செய்து நிறைவேற்ற வேண்டும்
மத்திய அரசிற்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் தமிழக அரசு டெட் தேர்வை முழுமையாக ரத்துசெய்ய வேண்டும் என்ற தீர்மானத்தை தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்ற வேண்டும்
என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற ஆசிரியர்கள் கோஷங்களை எழுப்பினார்கள் .
இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆண்டிபட்டி ஒன்றிய பகுதியைச் சேர்ந்த ஏராளமான ஆண் பெண் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்
இளைய தலை முறை மக்கள் நல பாதுகாப்பு இயக்கம் துவக்கம்...!!!
போலீஸ் அதிகாரியாக அன்று - அரசு பள்ளி ஆசிரியராக இன்று ! சீமா அகர்வாலின் சேவை !!
பணிபுரியும் ஆசிரியர்களுக்கு டெட் தேர்வு ரத்து செய்யக் கோரி ஆர்ப்பாட்டம்....!!!!
திண்டுக்கல்லில் 8 பேர் அதிரடி கைது...! ரூ. 1,10,000 ரொக்கம் பறிமுதல்...!
விவசாயிகள் வண்டல் மண் அள்ளிச் செல்ல பாதை அமைத்துக் கொடுப்பது பொதுப்பணித்துறை அதிகாரிகளின் பொறுப்பு.....!!!!