by Vignesh Perumal on | 2025-09-29 10:51 AM
திண்டுக்கல் மாவட்டம், சாணார்பட்டி அருகே சேலை வியாபாரி போல வந்த பெண் ஒருவர், வீட்டில் தனியாக இருந்த மூதாட்டிக்கு மயக்க மருந்து கலந்த டீ கொடுத்து, அவரிடமிருந்து 7 பவுன் நகைகள் மற்றும் ₹50 ஆயிரம் பணத்தைத் திருடிச் சென்ற நூதனச் சம்பவம் குறித்து சாணார்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சாணார்பட்டி அருகே உள்ள கொசவபட்டியைச் சேர்ந்தவர் ஆலிஸ் (52). இவர் வீட்டில் தனியாக இருந்தபோது, சுமார் 50 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர், சேலை மற்றும் நைட்டி போன்ற துணி வகைகளை விற்கும் வியாபாரி போல அங்கு வந்துள்ளார்.
அந்தப் பெண், ஆலிஸிடம், "இதே பகுதியில் வீடு வாடகைக்குப் பார்த்து வருகிறேன், இன்று உங்கள் திண்ணையில் படுத்துக்கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார். மனிதநேயத்துடன் ஆலிஸ் அந்தப் பெண்ணுக்கு டீ தயாரித்துக் கொடுத்துள்ளார்.
அந்தப் பெண் குடிக்கத் தண்ணீர் கேட்டதால், ஆலிஸ் வீட்டிற்குள் தண்ணீர் எடுக்கச் சென்றபோது, அந்த மர்மப் பெண் டீயில் மயக்க மருந்தைக் கலந்துள்ளார். அந்த மயக்க மருந்து கலந்த டீயைக் குடித்த ஆலிஸ், சிறிது நேரத்திலேயே மயக்கம் ஏற்பட்டு வீட்டிற்குள் சென்று உறங்கிவிட்டார்.
வெகு நேரமாகியும் ஆலிஸ் வெளியில் வராததால், அக்கம் பக்கத்தினர் வீட்டிற்குள் சென்று பார்த்தபோது, ஆலிஸ் மயங்கிக் கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். அப்போது, ஆலிஸ் அணிந்திருந்த 7 பவுன் நகைகள் (5 பவுன் சங்கிலி, 2 மோதிரங்கள், 2 தோடுகள், 2 மாட்டல்கள்) மற்றும் வீட்டில் இருந்த ₹50 ஆயிரம் ரொக்கப் பணம் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது.
மயக்க மருந்து கொடுத்துத் திருடிச் சென்ற அந்த மர்மப் பெண் குறித்துச் சாணார்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். துணி வியாபாரி போல நடித்து நடந்த இந்தச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆசிரியர்கள் குழு............
திண்டுக்கல் - கோவை நெடுஞ்சாலையில் டோல்கேட் திறப்பு ! பொதுமக்கள் கடும் எதிர்ப்பு - திறப்பு நிறுத்திவைப்பு!
அதிரடி காட்டும் தேனி எஸ் பி....!!! பொது மக்களிடம் நல்ல வரவேற்பு...!!!
ஆசை வார்த்தை கூறி அழைத்த பெண் - பைனான்சியரை நிர்வாணமாக்கி மிரட்டல் ! இருவரை தட்டி தூக்கிய போலீஸ்:!!
பிரபல ரவுடிகள் 6 பேர் அதிரடி கைது...! திக் திக் நிமிடங்கள்...!
கன்டெய்னரில் கடத்தல்...! ஒரு டன் பறிமுதல்...! டிரைவர் கைது...!