by admin on | 2025-09-21 12:21 PM
அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு இடையிலான கபடி போட்டி .
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி பாரத் நிகேதன் பொறியியல் கல்லூரியில் தேனி மாவட்டத்தில் முதல்முறையாக அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள 19 மண்டலங்களில் வெற்றி பெற்ற பொறியியல் கல்லூரி அணிகளுக்கு இடையேயான மாபெரும் கபாடி போட்டி நடைபெற்றது. இப்போட்டிக்கு கல்விக் குழுமத்தின் நிர்வாகத் தலைவர் முனைவர் ஸ்ரீ எஸ். மோகன் அவர்கள் தலைமை வகித்தார். நிர்வாக உறுப்பினர்கள் பிரசன்ன வெங்கடேசன், ரேணுகா மோகன், சுதா மீனாட்சி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இப்போட்டிக்கு பாரத் நிகேதன் பொறியியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் பி.வி.அருள்குமார் அவர்கள் வரவேற்புரை ஆற்றினார்.
இந்த விழாவிற்கு சிறப்பு விருந்தினர்களாக அண்ணா பல்கலைக்கழக விளையாட்டுத்துறை தலைவர் முனைவர் செந்தில்குமார், அண்ணா பல்கலைக்கழக விளையாட்டு துறை செயலாளர் முனைவர் பாலகுமாரன், ஆண்டிபட்டி காவல்துறை துணை கண்காணிப்பாளர் சிவசுப்பு ஆகியோர் கலந்து கொண்டு விளையாட்டு வீரர்களுக்கு ஆலோசனைகளை வழங்கினர் .
கடந்த இரண்டு நாட்களாக நடந்த இந்தப் போட்டியில் சென்னை புனிதஜோசப் பொறியியல் கல்லூரி முதல் இடத்தையும், கோவை ஹிந்துஸ்தான் பொறியியல் கல்லூரி, கன்னியாகுமரி லயோலோ பொறியியல் கல்லூரி அணி , முறையே இரண்டாம் மற்றும் மூன்றாம் இடத்தை கைப்பற்றினர். வெற்றி பெற்ற கல்லூரி அணிகளுக்கு அண்ணா பல்கலைக்கழக சார்பாக பதக்கங்களும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டது. கபடி போட்டியின் ஏற்பாடுகளை கல்லூரியின் உடற்கல்வி இயக்குனர் கே.பி.சிவா செய்திருந்தார்.மேலும் இப்போட்டி ஒருங்கிணைப்பு பணிகளை கல்விக் குழும மேலாளர் எம்.நாகேந்திர குமார், அனைத்து துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவ மாணவியர்கள் மற்றும் அலுவலகர்கள் செய்திருந்தனர்.
திண்டுக்கல் - கோவை நெடுஞ்சாலையில் டோல்கேட் திறப்பு ! பொதுமக்கள் கடும் எதிர்ப்பு - திறப்பு நிறுத்திவைப்பு!
அதிரடி காட்டும் தேனி எஸ் பி....!!! பொது மக்களிடம் நல்ல வரவேற்பு...!!!
ஆசை வார்த்தை கூறி அழைத்த பெண் - பைனான்சியரை நிர்வாணமாக்கி மிரட்டல் ! இருவரை தட்டி தூக்கிய போலீஸ்:!!
பிரபல ரவுடிகள் 6 பேர் அதிரடி கைது...! திக் திக் நிமிடங்கள்...!
கன்டெய்னரில் கடத்தல்...! ஒரு டன் பறிமுதல்...! டிரைவர் கைது...!