by Vignesh Perumal on | 2025-08-07 11:28 AM
சிறப்பு உதவி ஆய்வாளர் சண்முகவேலைக் கொலை செய்த குற்றவாளியான மணிகண்டன், காவல்துறையினரால் என்கவுன்ட்டர் செய்யப்பட்டதில் உயிரிழந்தார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு, திருப்பூர் மாவட்டம், உடுமலை அருகே சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணியாற்றி வந்த சண்முகவேல், குற்றவாளிகளை விசாரிக்கச் சென்றபோது வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்தச் சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தக் கொலை வழக்கில், மணிகண்டன், அவரது தந்தை மூர்த்தி மற்றும் அவரது அண்ணன் தங்கபாண்டி ஆகிய மூவரும் தேடப்பட்டு வந்தனர். மூர்த்தி மற்றும் தங்கபாண்டி ஏற்கனவே சரணடைந்த நிலையில், மணிகண்டனைப் பிடிக்கக் காவல்துறை தனிப்படை அமைத்துத் தேடி வந்தது.
தனிப்படை போலீசார், மணிகண்டன் பதுங்கியிருந்த இடத்தைக் கண்டுபிடித்து அவரைச் சுற்றி வளைத்தனர். அப்போது, மணிகண்டன் போலீசாரின் பிடியில் இருந்து தப்பிக்க முயன்றார். அவரைப் பிடிக்க முயன்ற போலீஸ் அதிகாரி சரவணக்குமாரைத் தாக்கிவிட்டுத் தப்பி ஓட முயற்சி செய்தபோது, காவல்துறையினர் தற்காப்புக்காக அவரைச் சுட்டனர். இதில், மணிகண்டன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த என்கவுன்ட்டர் சம்பவம், காவல்துறையினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நிர்வாக ஆசிரியர் - பா.விக்னேஷ்பெருமாள்
பணி செய்த வீட்டில் பணம் நகை திருட்டு - கைவரிசை காட்டிய கணவன், மனைவி ! 24 மணி நேரத்தில் தட்டி தூக்கிய போலீஸ் !!
தனியார் துறை தேர்வு முகாம் மூலம் தேர்வு பெற்றவர்களுக்கு பணி ஆணை வழங்கிய கலெக்டர் வைத்தியநாதன்....!!!"
பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு விரிவாக்கத் திட்டம். கலெக்டர் ஆய்வு...!!!
தனியார் துறை வேலை வாய்ப்பு விழிப்புணர்வு வாகனத்தை கலெக்டர் வைத்தியநாதன் துவக்கி வைத்தார்....!!!!
சைபர் குற்ற பணத்தை டாலராக மாற்றி - ஜாலி ! 3 பேரை தட்டி தூக்கி போலீஸ் !!