by Vignesh Perumal on | 2025-08-06 08:26 PM
திண்டுக்கல் மாவட்டம், சிறுமலைப் பிரிவுப் பகுதியில், வருகிற விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி, இந்து அமைப்புகளுடன் காவல்துறை ஆலோசனை கூட்டம் நடத்தியது. இந்தக் கூட்டத்திற்கு புறநகர் துணை கண்காணிப்பாளர் (டி.எஸ்.பி.) சங்கர் தலைமை தாங்கினார்.
விநாயகர் சதுர்த்தி விழாவின்போது சிலைகள் அமைப்பது, ஊர்வலம் நடத்துவது மற்றும் சிலைகள் கரைக்கும் நிகழ்வுகளைப் பாதுகாப்பான முறையில் நடத்துவது குறித்து இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
விநாயகர் சிலைகளை பொது இடங்களில் நிறுவுவதற்கு காவல்துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகளிடம் உரிய அனுமதி பெற வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. ஊர்வலம் செல்லும் பாதைகள், நேரம் மற்றும் ஒலிபெருக்கிகள் பயன்படுத்துவது குறித்து விதிகள் வகுக்கப்பட்டு, அதைப் பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டது.
விழாவின்போது பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்காமல் இருக்க, தேவையான பாதுகாப்பு அம்சங்களை கடைப்பிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.
இந்தக் கூட்டத்தில் பல்வேறு இந்து அமைப்புகளின் நிர்வாகிகள் கலந்துகொண்டனர். சட்டம்-ஒழுங்கைப் பாதுகாப்பதில் காவல்துறையினருக்கு முழு ஒத்துழைப்பு அளிக்கப்படும் என்று இந்து அமைப்பினர் உறுதி அளித்தனர்.
செய்தி-மோகன் கணேஷ் திண்டுக்கல்.
பணி செய்த வீட்டில் பணம் நகை திருட்டு - கைவரிசை காட்டிய கணவன், மனைவி ! 24 மணி நேரத்தில் தட்டி தூக்கிய போலீஸ் !!
தனியார் துறை தேர்வு முகாம் மூலம் தேர்வு பெற்றவர்களுக்கு பணி ஆணை வழங்கிய கலெக்டர் வைத்தியநாதன்....!!!"
பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு விரிவாக்கத் திட்டம். கலெக்டர் ஆய்வு...!!!
தனியார் துறை வேலை வாய்ப்பு விழிப்புணர்வு வாகனத்தை கலெக்டர் வைத்தியநாதன் துவக்கி வைத்தார்....!!!!
சைபர் குற்ற பணத்தை டாலராக மாற்றி - ஜாலி ! 3 பேரை தட்டி தூக்கி போலீஸ் !!