by Vignesh Perumal on | 2025-04-03 02:03 PM
கோவை மாவட்டத்தில் அமைந்துள்ள முருகனின் ஆறுபடைகளில் ஒன்றான மருதமலையில் சுப்பிரமணி சாமி திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த பிரசித்தி பெற்ற புனித தளத்தில் நாளை கும்பாபிஷேகம் நடைபெற இருக்கிறது. இச்சூழலில் அங்கு பலத்த காவலர்கள் பாதுகாப்பு அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மருதமலை அடிவாரத்தில் உள்ள தனியாருக்கு சொந்தமான வேல் கோட்டம் தியான மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மண்டபத்தில் சுப்பிரமணியரை வேல் ரூபத்தில் பக்தர்கள் வழிபட்டு வருகின்றனர்.
இங்கு மூலவருக்கு முன்பாக சுமார் 2 1/2 அடி வெள்ளியால் உருவாக்கப்பட்ட, 4 லட்சம் மதிப்பிலான வெள்ளிவேல் அமைக்கப்பட்டிருந்தது. ஏப்ரல் 4 ஆம் தேதி கும்பாபிஷேக நடைபெறும் நிலையில், ஏப்ரல் 3 ஆம் தேதி இந்த வெள்ளிவேல் திருட்டு சம்பவம் நிகழ்ந்துள்ளது. இச்சம்பவத்தில் ஈடுபட்ட நபர் சாமியார் வேடத்தில் சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், சாமியார் வேடத்தில் சென்ற நபர் ஒருவர் வெள்ளிவேலை திருடிச் சென்றது சி.சி.டி.வி யில் பதிவாகியுள்ளது. தற்போது அது சமூகவலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.
இந்த திருட்டு சம்பவம் அடிப்படையில் வெள்ளிவேலை திருடி சென்ற நபரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். பலத்த காவல் பாதுகாப்பை மீறி பட்டப் பகலில் மருதமலையில் வேலை திருடி சென்ற சம்பவம் பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஒரு கோடி மதிப்பிலான கஞ்சா கடத்தல் - கஞ்சா மற்றும் 2 சொகுசு கார்கள் பறிமுதல், 4 பேர் கைது ! தேனி போலீஸ் அதிரடி !!
"உறவைத் தவிர்த்த கணவர்" - உயிரோடு எரித்து கொலை செய்யப்பட்ட போலீஸ் எஸ்ஐ ! மனைவி கள்ளக்காதலலுடன் சேர்ந்து போட்ட ஸ்கெட்ச் !
மனைவியிடம் ஆபாச பேச்சு - அடங்காத ஆத்திரம் ! 5 ஆண்டுகள் கழித்து பழி தீர்த்த கொடூரம் !! சில மணிகளில் தூக்கிய போலீஸ் !!!
இன்ஸ்பெக்டருக்கு அரிவாள் வெட்டு ! சுட்டுப் பிடித்த போலீஸ் !!
அரசு ஊழியர்களுக்கு ஆப்பு ! த வெ க அரசு அதிரடி !!