by Vignesh Perumal on | 2025-04-02 02:10 PM
கோடை காலம் தொடங்கியதுமே பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஊட்டி மற்றும் கொடைக்கானல் பகுதிகளுக்கு அதிகப்படியான சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். இதனால் அந்த சுற்றுலா தளங்கள் இரண்டிலும் வழக்கத்திற்கு மாறாக போக்குவரத்து நெரிசல் அதிகமாகிறது அந்த போக்குவரத்து நெரிசலையை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு (ஏப்ரல் - 1) நேற்று முதல் இ-பாஸ் பெற்ற வாகனங்களை மட்டுமே இன்று முதல் கொடைக்கானல் பகுதிக்கு அனுமதிக்கப்படும் என்றும், வேலை நாட்களில் நான்காயிரம் வாகனங்களும் விடுமுறை நாட்களில் 6,000 வாகனங்கள் அனுமதிக்கப்படும் என்று திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் சரவணன் அறிவித்திருந்தார்.
இதைத்தொடர்ந்து திண்டுக்கல் - தேனி எல்லை பகுதியான கெங்குவார்பட்டி சோதனை சாவடியில் இ-பாஸ் பெற்ற வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றன. இச்சூழலில் நீலகிரி மாவட்டத்திலும் இ-பாஸ் நடைமுறை அமலுக்கு வந்துள்ளது.
இந்நிலையில், இ-பாஸ் நடைமுறையை முழுவதுமாக ரத்து செய்ய வலியுறுத்தி நீலகிரி மாவட்டத்தில் வணிகர்கள் இன்று ஒருநாள் முழு கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும், 14 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி நடைபெற்று வரும் இந்த போராட்டத்தில் மாவட்டம் முழுவதும் சுமார் 20,000 கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், உணவகங்கள் மூடப்பட்டுள்ளதால் இ-பாஸ் பெற்று வரும் சுற்றுலா பயணிகள் உணவு, குடிநீர் கிடைக்காமல் மிகவும் சிரமப்பட்டு வருவதாக புகார் எழுந்துள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வணிகர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஒரு கோடி மதிப்பிலான கஞ்சா கடத்தல் - கஞ்சா மற்றும் 2 சொகுசு கார்கள் பறிமுதல், 4 பேர் கைது ! தேனி போலீஸ் அதிரடி !!
"உறவைத் தவிர்த்த கணவர்" - உயிரோடு எரித்து கொலை செய்யப்பட்ட போலீஸ் எஸ்ஐ ! மனைவி கள்ளக்காதலலுடன் சேர்ந்து போட்ட ஸ்கெட்ச் !
மனைவியிடம் ஆபாச பேச்சு - அடங்காத ஆத்திரம் ! 5 ஆண்டுகள் கழித்து பழி தீர்த்த கொடூரம் !! சில மணிகளில் தூக்கிய போலீஸ் !!!
இன்ஸ்பெக்டருக்கு அரிவாள் வெட்டு ! சுட்டுப் பிடித்த போலீஸ் !!
அரசு ஊழியர்களுக்கு ஆப்பு ! த வெ க அரசு அதிரடி !!