by Vignesh Perumal on | 2025-04-01 05:24 PM
கன்னியாகுமரி அருகே திருவள்ளுவர் சிலைக்கு செல்ல 3 புதிய படகுகளின் கட்டுமான வடிவமைப்பு தயார் செய்யும் பணி நடந்து வருகிறது என சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட நெடுஞ்சாலை மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை கொள்கை விளக்க குறிப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கன்னியாகுமரி படகுத்துறையின் மூலம் 2023-24ம் ஆண்டில் ரூ.5.2 கோடி நிகர லாபம் ஈட்டப்பட்டுள்ளது.
2022-23ம் ஆண்டில் 21.36 லட்சம் பேர் பயணம் செய்ததன் மூலம் ரூ.3.3 கோடி நிகர லாபம் கிடைத்துள்ளது. 2024-25 நிதி ஆண்டில் எதிர்நோக்கப்பட்ட மதிப்பீட்டின் படி 20.53 லட்சம் பயணம் செய்து ரூ.9.31 கோடி லாபம் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது சுற்றுலா பயணிகளை வெகுவாக ஈர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ஒரு கோடி மதிப்பிலான கஞ்சா கடத்தல் - கஞ்சா மற்றும் 2 சொகுசு கார்கள் பறிமுதல், 4 பேர் கைது ! தேனி போலீஸ் அதிரடி !!
"உறவைத் தவிர்த்த கணவர்" - உயிரோடு எரித்து கொலை செய்யப்பட்ட போலீஸ் எஸ்ஐ ! மனைவி கள்ளக்காதலலுடன் சேர்ந்து போட்ட ஸ்கெட்ச் !
மனைவியிடம் ஆபாச பேச்சு - அடங்காத ஆத்திரம் ! 5 ஆண்டுகள் கழித்து பழி தீர்த்த கொடூரம் !! சில மணிகளில் தூக்கிய போலீஸ் !!!
இன்ஸ்பெக்டருக்கு அரிவாள் வெட்டு ! சுட்டுப் பிடித்த போலீஸ் !!
அரசு ஊழியர்களுக்கு ஆப்பு ! த வெ க அரசு அதிரடி !!