by Satheesh on | 2025-03-29 05:32 PM
மதுரை : உசிலம்பட்டியில் காவலர் முத்துக்குமார் கொலை செய்யப்பட்ட வழக்கில், முக்கிய குற்றவாளியான கஞ்சா வியாபாரி பொன்வண்ணன், தேனி மாவட்டம் கம்பம் வனப்பகுதியில் போலீசாரால் என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்டார். முத்தையன்பட்டி டாஸ்மாக் கடையில் வியாழக்கிழமை ஏற்பட்ட தகராறில், காவலர் முத்துக்குமாரை கொலை செய்ததாக பொன்வண்ணன் மீது வழக்கு தொடரப்பட்டது. போலீசாரை தாக்கி தப்பி ஓட்டம் போட்ட பொன்வண்ணனை பிடிக்கும் முயற்சியில் நடந்த மோதலில் என்கவுண்ட்டர் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், கம்பம் அரசு மருத்துவமனையில் போலீசார மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே காவலர் கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய 4 பேர் கம்பம் பகுதியில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது, இதன் கம்பம் பகுதியில் கொலையாளிகள் அடையாளம் கண்டு பிடிக்க முயன்றனர். அப்போது போலீசாருக்கும், கொலையாளிகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. தொடர்ந்து போலீசார் அவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தினர். இந்த துப்பாக்கி சூட்டில் பொன்வண்ணன் (35) என்பவருக்கு காலில் அடிபட்டது. 2 பேர் தப்பி ஓடினர். இந்த சம்பவத்தில் போலீசார் ஒருவருக்கு கையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. காவலரும், குற்றவாளியும் கம்பம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
N.சதீஷ்குமார், பெரியகுளம். தேனி.
திருப்பி அடிக்க திமுக ரெடி....!!!! விரட்டி அடிக்க விஜய் ரெடி..!!! கட்டுரையாளர் பாண்டியராஜ்...!!!
நீதிபதியின் கண்டிப்பு - அருணை தூக்கி அடித்த விஜய்! லஞ்ச ஒழிப்புத் துறைக்கு புதிய தலைவர் - யார் இந்த மகேஸ்வரி. ?
தனக்கு அரசியல் தெரியாது என்பது முதல்வர் விஜய்க்கு தெரியும்...!!! கட்டுரையாளர் மா பாண்டியராஜ்....!!!!
திண்டுக்கல் - கோவை நெடுஞ்சாலையில் டோல்கேட் திறப்பு ! பொதுமக்கள் கடும் எதிர்ப்பு - திறப்பு நிறுத்திவைப்பு!
அதிரடி காட்டும் தேனி எஸ் பி....!!! பொது மக்களிடம் நல்ல வரவேற்பு...!!!