by Vignesh Perumal on | 2025-03-29 11:43 AM
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள முதலக்கம்பட்டி ஊராட்சி குடியிருப்புகளுக்கு, வைகைஅணையில் இருந்து குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. இப்பகுதியில் சுமார் 500க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்த ஊராட்சியை சுற்றிலும் இரண்டுக்கும் மேற்பட்ட குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைந்துள்ளது.
இருந்த போதிலும், நேற்று விநியோகம் செய்யப்பட்ட குடிநீரில் மண் படிந்து சுகாதாரமற்ற முறையில் காணப்படுவதாக அப்பகுதியில் வசிக்கும் குடியிருப்பு வாசிகள் குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றனர். அதுமட்டுமின்றி, அம்மக்களுக்கு வயிற்றுப்போக்கு, டைபாய்டு உள்ளிட்ட உடல் சார்ந்த நோய்கள் பருவும் அபாயம் ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
எனவே, முதலக்கம்பட்டி ஊராட்சி நிர்வாகம் தகுந்த நடவடிக்கை எடுத்து அப்பகுதியில் வசிக்கும் மக்களின் சுகாதாரத்தை பாதுகாத்திட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஒரு கோடி மதிப்பிலான கஞ்சா கடத்தல் - கஞ்சா மற்றும் 2 சொகுசு கார்கள் பறிமுதல், 4 பேர் கைது ! தேனி போலீஸ் அதிரடி !!
"உறவைத் தவிர்த்த கணவர்" - உயிரோடு எரித்து கொலை செய்யப்பட்ட போலீஸ் எஸ்ஐ ! மனைவி கள்ளக்காதலலுடன் சேர்ந்து போட்ட ஸ்கெட்ச் !
மனைவியிடம் ஆபாச பேச்சு - அடங்காத ஆத்திரம் ! 5 ஆண்டுகள் கழித்து பழி தீர்த்த கொடூரம் !! சில மணிகளில் தூக்கிய போலீஸ் !!!
இன்ஸ்பெக்டருக்கு அரிவாள் வெட்டு ! சுட்டுப் பிடித்த போலீஸ் !!
அரசு ஊழியர்களுக்கு ஆப்பு ! த வெ க அரசு அதிரடி !!