by Vignesh Perumal on | 2025-03-26 02:48 PM
மூத்த தமிழ் திரைப்பட இயக்குனர் பாரதிராஜாவின் மகன் நடிகர் மனோஜ் பாரதிராஜா 48 வயதில் மாரடைப்பால் காலமானார். நடிகர் மனோஜ் சமீபத்தில் ஒரு மாதத்திற்கு முன்புதான் இதய அறுவை சிகிச்சை செய்திருந்தார். இந்நிலையில், மருத்துவ சிகிச்சை இருந்தபோதிலும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
தனது தந்தை இயக்கிய தாஜ்மஹால் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமான மனோஜ், சமுத்திரம், வருஷமெல்லாம் வசந்தம் மற்றும் அல்லி அர்ஜுனா உள்ளிட்ட பல தமிழ் படங்களில் நடித்தார். கடைசியாக அவர் கொம்பன் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். அவரது மறைவு செய்தியை அறிந்த சினிமா துறையினர், ரசிகர்கள் மற்றும் நலம் விரும்பிகள் இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், இன்று நடிகர் மனோஜ் பாரதிராஜாவின் உடலுக்கு முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் நேரில் மரியாதை செலுத்துகின்றனர். அதுமட்டுமின்றி, இன்று காலை முதல் இயக்குனர்கள் பாக்கியராஜ், மணிரத்னம், வாசு மற்றும் நடிகர்கள் விஜய், சூர்யா, விஜய் சேதுபதி, அருண் விஜய் உள்ளிட்ட ஏராளமான திரைப் பிரபலங்கள் நேரில் மரியாதை செலுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒரு கோடி மதிப்பிலான கஞ்சா கடத்தல் - கஞ்சா மற்றும் 2 சொகுசு கார்கள் பறிமுதல், 4 பேர் கைது ! தேனி போலீஸ் அதிரடி !!
"உறவைத் தவிர்த்த கணவர்" - உயிரோடு எரித்து கொலை செய்யப்பட்ட போலீஸ் எஸ்ஐ ! மனைவி கள்ளக்காதலலுடன் சேர்ந்து போட்ட ஸ்கெட்ச் !
மனைவியிடம் ஆபாச பேச்சு - அடங்காத ஆத்திரம் ! 5 ஆண்டுகள் கழித்து பழி தீர்த்த கொடூரம் !! சில மணிகளில் தூக்கிய போலீஸ் !!!
இன்ஸ்பெக்டருக்கு அரிவாள் வெட்டு ! சுட்டுப் பிடித்த போலீஸ் !!
அரசு ஊழியர்களுக்கு ஆப்பு ! த வெ க அரசு அதிரடி !!