by satheesh on | 2026-03-26 01:42 PM
ஓசியில் சிகரெட் தர மறுத்த கடைக்காரருக்கு சரமாரி அரிவாள் வெட்டு: இளைஞர்களுக்கு போலீசார் வலைவீச்சு !
கோவில்பட்டியில் ஓசியில் சிகரெட் தர மறுத்த பெட்டிக்கடை உரிமையாளரை, அரிவாளால் போதை கும்பலை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர். மாவட்டம் : கோவில்பட்டி ராஜீவ் நகரைச் சேர்ந்தவர் ஜோதி (55). இவர் அப்பகுதியில் உள்ள பசுவந்தனை சாலையில் பெட்டிக்கடை நடத்தி வருகிறார். நேற்று (புதன்கிழமை) இரவு, இவரது கடைக்கு வந்த மதுபோதையில் இருந்த சில இளைஞர்கள், ஓசியில் சிகரெட் கேட்டுள்ளனர். இலவசமாகச் சிகரெட் தர ஜோதி மறுத்ததால், அந்த இளைஞர்கள் அவருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஆத்திரமடைந்த கும்பல், தாங்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளால் ஜோதியின் தலை மற்றும் தோள்பட்டை பகுதிகளில் சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பியோடினர். ரத்த வெள்ளத்தில் சரிந்த ஜோதியை, அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர், நிலைமை தீவிரமாக இருந்ததால் மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அவர் மாற்றப்பட்டார். இந்த சம்பவம் குறித்து கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து, தலைமறைவாக உள்ள இளைஞர்களை தேடி வருகின்றனர்.
இணை ஆசிரியர் : N. சதீஷ்குமார், பெரியகுளம். தேனி.
வெளிநாட்டில் இருந்து கொண்டு ஆசிரியர் சம்பளம் பெற்று மோசடி....????
கஞ்சா கடத்தலில் முறுக்கு வியாபாரி - சொந்த ஊரில் தொழிலதிபர் ! அலேக்ககாக அள்ளிய ஆந்திரா போலீஸ் !!
கோவையில் லாட்டரி மார்ட்டின் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை !
தமிழ்நாடு அரசு செவிலியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்....!!!
முல்லைப் பெரியாறு அணையில் இருந்து முதல் போக நெல் சாகுபடிக்கு கலெக்டர் வைத்தியநாதன் நீரை திறந்து வைத்தார்...!!!