by satheesh on | 2026-03-25 08:09 PM
சமூக வலைதளங்களில் சிறுமியின் புகைப்படம் வெளியீடு - 22 வழக்குகள் பதிவு :
வேடநத்தம் படுகொலை சம்பவத்தில் சமூக வலைதளங்களில் சட்டவிரோதமாக சிறுமியின் விவரங்களை வெளியிட்ட நபர்கள் மற்றும் சமூக ஊடகங்களுக்கு எதிராக 22 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட சிறுமிகளின் புகைப்படம், பெயர் மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட அடையாளங்களைச் சமூக ஊடகங்கள் அல்லது இணையதளங்களில் வெளியிடுவது இந்தியச் சட்டப்படி (POCSO மற்றும் பிற பிரிவுகள்) கடும் குற்றமாகும். இது பாதிக்கப்பட்ட சிறுமியின் தனிப்பட்ட பாதுகாப்பிற்கும், கண்ணியத்திற்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்துவதாகும். குளத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வேடநத்தம் மாணவி கொலை வழக்கில், சிறுமியின் அடையாளங்களை வெளிப்படுத்தும் வகையில் பதிவிட்டவர்கள் மீது இதுவரை 22 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மாவட்டக் காவல்துறை இது தொடர்பாக விடுத்துள்ள எச்சரிக்கையில்: "பாதிக்கப்பட்ட சிறுமியின் அடையாளங்களைச் சமூக வலைதளங்களில் பதிவிடும் நபர்கள் மற்றும் அத்தகைய பதிவுகளை அனுமதிக்கும் சமூக ஊடக நிறுவனங்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்." எனத் தூத்துக்குடி மாவட்டக் காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இணை ஆசிரியர் : N. சதீஷ்குமார், பெரியகுளம். தேனி.
வெளிநாட்டில் இருந்து கொண்டு ஆசிரியர் சம்பளம் பெற்று மோசடி....????
கஞ்சா கடத்தலில் முறுக்கு வியாபாரி - சொந்த ஊரில் தொழிலதிபர் ! அலேக்ககாக அள்ளிய ஆந்திரா போலீஸ் !!
கோவையில் லாட்டரி மார்ட்டின் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை !
தமிழ்நாடு அரசு செவிலியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்....!!!
முல்லைப் பெரியாறு அணையில் இருந்து முதல் போக நெல் சாகுபடிக்கு கலெக்டர் வைத்தியநாதன் நீரை திறந்து வைத்தார்...!!!