by satheesh on | 2026-03-12 01:29 PM
விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை :
விளாத்திகுளம் அருகே 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு தலை துண்டித்துக் கொடூரமான முறையில் கொல்லப்பட்டுள்ளார். தூத்துக்குடி மாவட்டம் குளத்தூர் காவல் நிலையத்திற்குட்பட்ட வேடநத்தம் கிராமத்தில் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவி, இயற்கை உபாதைக்காக நேற்று மாலை காட்டுப் பகுதிக்குச் சென்றுள்ளார். அப்பகுதியிலுள்ள குடியிருப்புகளில் கழிவறை இல்லாததால், காட்டுப்பகுதிக்குச் சென்றுள்ளார். நீண்ட நேரமாகியும் மாணவி திரும்பாததால், பெற்றோர்கள், உறவினர்கள் தேடியும் கிடைக்காததால், காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளனர். இதனிடையே, வேடநத்தம் அருகே உள்ள காட்டுப்பகுதியில் இளம்பெண் சடலம் துண்டாக வெட்டப்பட்டு கிடப்பதாக தகவல் கிடைத்துள்ளது.
தொடர்ந்து விசாரணை மேற்கொண்ட காவல் துறையினர், அந்த உடல் காணாமல்போன மாணவி எனத் தெரியவந்துள்ளது. அவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு பின்னர் தலை துண்டித்துக் கொல்லப்பட்டுள்ளதாக காவல் துறை விசாரணையில் தெரியவந்துள்ளது. கொலை செய்த குற்றவாளியை கண்டுபிடிக்க வலியுறுத்தி, கொல்லப்பட்ட மாணவியின் உறவினர்களும், குடும்பத்தினரும் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவத்துக்கு திமுக எம்.பி. கனிமொழி, மாநில பாஜக முன்னாள் அண்ணாமலை உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இணை ஆசிரியர் : ZN. சதீஷ்குமார், பெரியகுளம். தேனி.
வெளிநாட்டில் இருந்து கொண்டு ஆசிரியர் சம்பளம் பெற்று மோசடி....????
கஞ்சா கடத்தலில் முறுக்கு வியாபாரி - சொந்த ஊரில் தொழிலதிபர் ! அலேக்ககாக அள்ளிய ஆந்திரா போலீஸ் !!
கோவையில் லாட்டரி மார்ட்டின் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை !
தமிழ்நாடு அரசு செவிலியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்....!!!
முல்லைப் பெரியாறு அணையில் இருந்து முதல் போக நெல் சாகுபடிக்கு கலெக்டர் வைத்தியநாதன் நீரை திறந்து வைத்தார்...!!!