by satheesh on | 2026-02-28 12:50 PM
திண்டுக்கல்லில் ஏலக்காய் வாங்கித் தருவதாக ரூ. 3 கோடி மோசடி - ஒருவர் கைது :
தேனி மாவட்டம் போடியை சேர்ந்த முத்துப்பாண்டி(26) இவர் திண்டுக்கல் மாவட்டம் ஆடலூர், பன்றிமலை, தாண்டிக்குடி உள்ளிட்ட பகுதிகளில் ஏலக்காய் வாங்கி அதை தேனி மாவட்டம் போடியில் உள்ள தனியார் ஏலம் மையம் மூலம் விற்பனை செய்து வந்தார். இந்நிலையில், தேனி மாவட்டம் போடியை சேர்ந்த சத்யபிரியன் மற்றும் அவரது மனைவி அபி அவரது அப்பா கமலக்கண்ணன் ஆகியோர் ஏலக்காய் வாங்கித் தருவதாக ஆசை வார்த்தை கூறி நம்பிக்கையை ஏற்படுத்தி பல்வேறு தவணைகளாக வங்கி மூலம் ரூ.3,08,31,900 பெற்றுக் கொண்டு ஏலக்காய் வாங்கி தராமல் காலம் தாழ்த்தி வந்தனர். முத்துப்பாண்டி பணத்தைத் திருப்பி கேட்டதற்கு சத்யபிரியன் உள்ளிட்டோர் அடியாட்களை வைத்து ரோட்டில் செல்லும்போது லாரியை வைத்து ஏற்றி கொலை செய்து விடுவதாக கொலை மிரட்டல் விடுத்ததாக மாவட்ட S.P. பிரதீப் அவர்களிடம் அளித்த புகாரின் பேரில் மாவட்ட குற்றப்பிரிவு டிஎஸ்பி.குமரேசன் தலைமையிலான போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு மேற்படி சம்பவத்தில் ஈடுபட்ட சத்யப்பிரியனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர் மேலும் இவ்வழக்கில் தொடர்புடைய மனைவி அபி, தந்தை கமலக்கண்ணன் ஆகிய 2 பேரை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
இணை ஆசிரியர் : N. சதீஷ்குமார் , பெரியகுளம். தேனி.
வெளிநாட்டில் இருந்து கொண்டு ஆசிரியர் சம்பளம் பெற்று மோசடி....????
கஞ்சா கடத்தலில் முறுக்கு வியாபாரி - சொந்த ஊரில் தொழிலதிபர் ! அலேக்ககாக அள்ளிய ஆந்திரா போலீஸ் !!
கோவையில் லாட்டரி மார்ட்டின் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை !
தமிழ்நாடு அரசு செவிலியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்....!!!
முல்லைப் பெரியாறு அணையில் இருந்து முதல் போக நெல் சாகுபடிக்கு கலெக்டர் வைத்தியநாதன் நீரை திறந்து வைத்தார்...!!!