by satheesh on | 2026-02-27 07:33 PM
விஜயிடம் இருந்து விவாகரத்து கோரி மனைவி சங்கீதா மனுத்தாக்கல் :
விஜயிடம் இருந்து விவாகரத்து கோரி மனைவி சங்கீதா செங்கல்பட்டு குடும்பநல நீதிமன்றத்தில் மனுத்தாக்கல். நடிகை ஒருவருடன் திருமணத்தை மீறிய உறவில் விஜய் இருப்பதாக குற்றம் சாட்டி விவாகரத்து கோரியுள்ளார். நடிகை ஒருவருடன் திருமணத்தை மீறிய உறவில் விஜய் இருப்பது ஏப்ரல் 2021ஆம் ஆண்டு எனக்கு தெரியவந்தது. இது வலியையும், மன உளைச்சலையும் கொடுத்தது. இது துரோகம் மற்றும் திருமண நம்பிக்கையை மீறுவதற்கு சமம் - விவாகரத்து கோரிய மனுவில் சங்கீதா தெரிவிப்பு. நடிகை ஒருவருடன் திருமணத்தை மீறிய உறவில் விஜய்: விவாகரத்து கோரி விஜய் மனைவி மனு. மேலும், என் கணவருடன் இருக்கும் புகைப்படங்களை நடிகை வெளியிடுவது எனக்கும், எனது பிள்ளைகளுக்கும் அவமானத்தை தருகிறது. தேவைப்பட்டால் எனது கணவருடன் திருமணத்தை மீறிய உறவில் இருக்கும் நடிகையை வழக்கின் 2வது எதிர்மனுதாரராக சேர்ப்பேன். நெருக்கடி ஏற்பட்டால் அந்த நடிகைக்கும் எனது கணவருக்கும் உள்ள உறவை வெளிப்படுத்தும் ஆதாரங்களை கோர்ட்டில் வழங்குவேன் விவாகரத்து மனுவில் விஜயின் மனைவி சங்கீதா குறிப்பிட்டுள்ளார்.
குடும்பத்திற்கு அவமானம் :
விஜய்யுடன் இருந்த புகைப்படங்களை நடிகை பகிர்ந்ததால் குடும்பத்திற்கு அவமானம். சம்பந்தப்பட்ட நடிகையோடு விஜய் வெளிநாடுகளுக்கு சென்றார்.வெளிநாடுகளுக்கு சென்றதை நடிகையே பகிர்ந்தார் பொது வெளியில் நன்மதிப்பை கெடுக்கக்கூடாது என்பதால் நடிகையின் பெயரை குறிப்பிடவில்லை"- சங்கீதா.
நடிகையுடனான தொடர்பை முறித்துக் கொள்வதாக விஜய் உறுதி கூறியும் அதன்படி நடக்கவில்லை 2021 செப். முதல் 2022 பிப். வரை வழக்கறிஞர் மூலம் சுமுகமாக பிரிவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தினோம் குழந்தைகளின் படிப்பு பாதிக்கக்கூடாது என்பதற்காகவும், மனதளவில் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காகவும் விவகரத்து கோருவதை தள்ளிவைத்தேன். 2021ல் இருந்து தன்னை வார்த்தையால் விஜய் அவமானப்படுத்தியதாகவும் தன்னை புறக்கணித்தார் ஒரே வீட்டிலேயே நடிகையுடன் தனித்தனியாக வசித்ததாகவும் தனது மனுவில் சங்கீதா குறிப்பிட்டுள்ளார் கணவன் - மனைவி உறவில் விஜய் நம்பிக்கை துரோகம் செய்துவிட்டதாக சங்கீதா பரபரப்பு புகார்
இணை ஆசிரியர் : N. சதீஷ்குமார், பெரியகுளம். தேனி.
வெளிநாட்டில் இருந்து கொண்டு ஆசிரியர் சம்பளம் பெற்று மோசடி....????
கஞ்சா கடத்தலில் முறுக்கு வியாபாரி - சொந்த ஊரில் தொழிலதிபர் ! அலேக்ககாக அள்ளிய ஆந்திரா போலீஸ் !!
கோவையில் லாட்டரி மார்ட்டின் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை !
தமிழ்நாடு அரசு செவிலியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்....!!!
முல்லைப் பெரியாறு அணையில் இருந்து முதல் போக நெல் சாகுபடிக்கு கலெக்டர் வைத்தியநாதன் நீரை திறந்து வைத்தார்...!!!