by satheesh on | 2026-02-21 06:28 PM
புதுடெல்லி செங்கோட்டையில் குண்டுவெடிப்பு சம்பவத்தில் தொடர்புடைய பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக தமிழகத்தை சேர்ந்த சிலர் பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக சமூக வலைதளங்களில் கருத்து பதிவிட்டது தொடர்பாக டெல்லி காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில், டெல்லி போலீசார் விசாரணை மேற்கொண்டதில், திருப்பூர் மாவட்டத்தில் 3 இடங்களில் இருந்து சமூக வலைதளங்களில் கருத்து பதிவிட்டது தெரிய வந்தது. அதன்பேரில், திருப்பூர் மாவட்டத்தில் இன்று திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, ஊத்துக்குளி பகுதியில் இருந்து 2 பேரும், பல்லடம் பகுதியில் இருந்து 3 பேரும், திருமுருகன்பூண்டி பகுதியில் இருந்து ஒருவரும் என 6 பேரை போலீசார் கைது செய்தனர். இது அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும், இது போன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை.
இதனிடையே, டெல்லியில் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பு வெடிகுண்டு தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை செங்கோட்டைக்கு அருகே தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக வெளியான தகவலால் உச்சக்கட்ட பாதுகாப்பு ஏற்பாடு
இணை ஆசிரியர் : N. சதீஷ்குமார், பெரியகுளம் ..தேனி.
வெளிநாட்டில் இருந்து கொண்டு ஆசிரியர் சம்பளம் பெற்று மோசடி....????
கஞ்சா கடத்தலில் முறுக்கு வியாபாரி - சொந்த ஊரில் தொழிலதிபர் ! அலேக்ககாக அள்ளிய ஆந்திரா போலீஸ் !!
கோவையில் லாட்டரி மார்ட்டின் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை !
தமிழ்நாடு அரசு செவிலியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்....!!!
முல்லைப் பெரியாறு அணையில் இருந்து முதல் போக நெல் சாகுபடிக்கு கலெக்டர் வைத்தியநாதன் நீரை திறந்து வைத்தார்...!!!