by satheesh on | 2026-02-10 07:24 PM
திண்டுக்கல்லில் ரூ.5 லட்சம் மோசடி செய்த வழக்கில் மேலும் ஒருவர் கைது : தேனி,போடியை சோ்ந்த சீனிவாசன் (42) இவரிடம் மர்ம நபர்கள் செல்போனில் தொடர்பு கொண்டு ரூ.50 லட்சம் கடன் வாங்கித் தருவதாக ஆசை வார்த்தை கூறி ரூ.5 லட்சம் முன் பணமாகத் தர வேண்டும் என்று திண்டுக்கல் நேருஜிநகா் பகுதிக்கு வரவழைத்து ரூ.5 லட்சத்தை பெற்றுக் கொண்டு ரூ.50 லட்சம் தருவதாக ஏமாற்றியது தொடர்பாக நகர் மேற்கு காவல் நிலைய போலீசார் அழகேசன்(46), முருகபாண்டி(40) ஆகிய 2 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மேலும் இது குறித்து நகர் DSP. கார்த்திக் மேற்பார்வையில் நகர் மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் மீனாட்சி தலைமையில் சார்பு ஆய்வாளர் காதர்மைதீன், நகர் குற்றத்தடுப்பு சிறப்பு சார்பு ஆய்வாளர் ஜார்ஜ் காவலர்கள் ராதா, முகமதுஅலி, விசுவாசம், சக்திவேல் ஆகியோர் கொண்ட தனிப்படையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு முக்கிய குற்றவாளியான திண்டுக்கல், NGO-காலனி, CTO- காலனியை சேர்ந்த முகமதுஅன்சார்(37) என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இணை ஆசிரியர் : N. சதீஷ்குமார், பெரியகுளம். தேனி.
வெளிநாட்டில் இருந்து கொண்டு ஆசிரியர் சம்பளம் பெற்று மோசடி....????
கஞ்சா கடத்தலில் முறுக்கு வியாபாரி - சொந்த ஊரில் தொழிலதிபர் ! அலேக்ககாக அள்ளிய ஆந்திரா போலீஸ் !!
கோவையில் லாட்டரி மார்ட்டின் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை !
தமிழ்நாடு அரசு செவிலியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்....!!!
முல்லைப் பெரியாறு அணையில் இருந்து முதல் போக நெல் சாகுபடிக்கு கலெக்டர் வைத்தியநாதன் நீரை திறந்து வைத்தார்...!!!