by admin on | 2026-02-04 07:32 PM
*தேர்தல் வாக்குறுதியில் கூறிய கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி இரண்டாவது நாளாக சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் சாலை மறியல் போராட்டம்*
*போராட்டத்தில் ஈடுபட்ட 800க்கும் மேற்பட்ட பணியாளர்களை போலீசார் கைது செய்தனர்*
தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி சங்கத்தின் கூட்டமைப்பு சார்பில் தேர்தல் வாக்குறுதியில் கூறிய பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இரண்டாவது நாளாக இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர் தேனி நேரு சிலை பகுதியில் கோரிக்கைகளை வலியுறுத்தி சுமார் 800-க்கும் மேற்பட்ட அங்கன்வாடி மற்றும் சத்துணவு பணியாளர்கள் இரண்டாவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர் தமிழ்நாடு அரசு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தில் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்து வழங்க வேண்டும்
சத்துணவு, அங்கன்வாடி மற்றும் வருவாய், கிராம நிர்வாக அலுவலக உதவியாளர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியமாக 7850 ரூபாய் வழங்க வேண்டும் 70 வயது பூர்த்தியான ஓய்வூதியதாரர்களுக்கு கூடுதலாக 10% ஓய்வூதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்இதனை அடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட சுமார் 800க்கும் மேற்பட்ட அங்கன்வாடி பணியாளர்களை போலீசார் கைது செய்து அழைத்துச் சென்றனர் இதனால் தேனி - கம்பம் நெடுஞ்சாலையில் சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது
வெளிநாட்டில் இருந்து கொண்டு ஆசிரியர் சம்பளம் பெற்று மோசடி....????
கஞ்சா கடத்தலில் முறுக்கு வியாபாரி - சொந்த ஊரில் தொழிலதிபர் ! அலேக்ககாக அள்ளிய ஆந்திரா போலீஸ் !!
கோவையில் லாட்டரி மார்ட்டின் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை !
தமிழ்நாடு அரசு செவிலியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்....!!!
முல்லைப் பெரியாறு அணையில் இருந்து முதல் போக நெல் சாகுபடிக்கு கலெக்டர் வைத்தியநாதன் நீரை திறந்து வைத்தார்...!!!