by admin on | 2025-12-22 05:18 PM
தேனி மாவட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 331 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது.
தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் இன்று (22.12.2025) நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 331 கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ரஞ்ஜீத் சிங், இ.ஆ.ப., அவர்கள் பொதுமக்களிடமிருந்து பெற்றுக் கொண்டார்.இக்கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை, புதிய வீட்டுமனைப் பட்டா, வேலைவாய்ப்பு மற்றும் இதர மனுக்கள் என மொத்தம் 331 கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள், பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி மனுக்கள் மீது குறித்த காலத்திற்குள் விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டார்.
இக்கூட்டத்தில், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில் 5 பயனாளிகளுக்கு ரூ.43,905/- மதிப்பிலான விலையில்லா தேய்ப்பு பெட்டிகளையும், 6 பயனாளிகளுக்கு ரூ.31,218/- மதிப்பிலான விலையில்லா தையல் இயந்திரங்களையும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார். இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் திரு.ப.ராஜகுமார், மாவட்ட ஆட்சியரின் கூடுதல் நேர்முக உதவியாளர் (நிலம்) திரு.கதிர்வேல், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் திருமதி கவிதா உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
தி.முத்து காமாட்சி எவிடன்ஸ் எடிட்டர்.9842337244
திண்டுக்கல் - கோவை நெடுஞ்சாலையில் டோல்கேட் திறப்பு ! பொதுமக்கள் கடும் எதிர்ப்பு - திறப்பு நிறுத்திவைப்பு!
அதிரடி காட்டும் தேனி எஸ் பி....!!! பொது மக்களிடம் நல்ல வரவேற்பு...!!!
ஆசை வார்த்தை கூறி அழைத்த பெண் - பைனான்சியரை நிர்வாணமாக்கி மிரட்டல் ! இருவரை தட்டி தூக்கிய போலீஸ்:!!
பிரபல ரவுடிகள் 6 பேர் அதிரடி கைது...! திக் திக் நிமிடங்கள்...!
கன்டெய்னரில் கடத்தல்...! ஒரு டன் பறிமுதல்...! டிரைவர் கைது...!