by satheesh on | 2025-12-20 04:58 PM
நல்ல நகைச்சுவை -திருப்பரங்குன்றத்து மலை மேல் இருப்பது தீபத்தூண் அல்ல என்று நிரூபிக்க எதிர் தரப்பு வழக்கறிஞர்கள் முன் வைக்கும் விவாதங்கள் நகைச்சுவைக்கு நல்ல தீனி போடுகின்றன.தீபத்தூண் இருக்கும் இடம் ஹிந்துக்களுக்கு சொந்தமானது எனும் பட்சத்தில், அதைப்பற்றி தர்கா நிர்வாகம் மற்றும் வக்ஃப் நிர்வாகம் போன்றவற்றின் கருத்துகளுக்கு என்ன அவசியம், எதற்காக அவர்களது வழக்கறிஞர்கள் இதில் பங்கேற்க வேண்டும் என்று புரியவில்லை. முதலில், 'நில அளவிடும் சர்வே கல். அதில் யாராவது தீபம் ஏற்றுவார்களா?' என்று கேட்கப்பட்டது. இரண்டு நாள் கழித்து, 'சமணர்கள் அதில் தீபம் ஏற்றி, அந்த வெளிச்சத்தில் விவாதித்தனர். அதற்கும் ஹிந்துக்களுக்கும் சம்பந்தம் இல்லை' என்று வாதாடினர். முருகனுக்கு இரண்டு மனைவிகள் இருந்தாலும், தீபம் ஒன்றுதான் இருக்க முடியும். குன்று இருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடமாக இருக்கலாம். . ஆனால் எல்லா தூணும் தீபத்தூணாக இருக்க முடியாது' என்றும் தர்க்க ரீதியில் விவாதிக்கப்பட்டது. அற நிலையத்துறை வழக்கறிஞர்கள் கிட்டத்தட்ட நாத்திகவாதிகளின் குரலிலேயே தங்கள் வாதத்திறனை காட்டி வருகின்றனர். பேசாமல், தி. க. தலைவர் வீரமணியையே அறநிலையத்துறை சார்பில் வாதாட வைத்திருக்கலாம் போலிருக்கிறது. அடுத்து 'பிரிட்டிஷார் காலத்தில் அது மைல் கல்லாக பயன்படுத்தப்பட்டது. பௌத்தர்கள் பால் குடிப்பதற்காக மாட்டை அந்த கல்லில்தான் கட்டிப் போட்டிருந்தனர். அதற்கும் ஹிந்துக்களுக்கும் என்ன சம்பந்தம் என்றெல்லாம் கூட வாதாடலாம்- எதையாவது ஒன்றை நீதிபதிகள் ஏற்பார்கள் என்ற நம்பிக்கையில். அதற்குள் வழக்கு முடிந்தால் நல்லது. – துக்ளக் சத்யா, மூத்த பத்திரிகையாளர்
செய்தியாளர் ; N.சதீஷ்குமார், பெரியகுளம். தேனி.
திண்டுக்கல் - கோவை நெடுஞ்சாலையில் டோல்கேட் திறப்பு ! பொதுமக்கள் கடும் எதிர்ப்பு - திறப்பு நிறுத்திவைப்பு!
அதிரடி காட்டும் தேனி எஸ் பி....!!! பொது மக்களிடம் நல்ல வரவேற்பு...!!!
ஆசை வார்த்தை கூறி அழைத்த பெண் - பைனான்சியரை நிர்வாணமாக்கி மிரட்டல் ! இருவரை தட்டி தூக்கிய போலீஸ்:!!
பிரபல ரவுடிகள் 6 பேர் அதிரடி கைது...! திக் திக் நிமிடங்கள்...!
கன்டெய்னரில் கடத்தல்...! ஒரு டன் பறிமுதல்...! டிரைவர் கைது...!