by Vignesh Perumal on | 2025-05-29 11:21 AM
திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு சாலையில் அமைந்துள்ள வக்கம்பட்டியில், வெண்புறா கபடி குழு ஏற்பாடு செய்திருந்த கபடி போட்டிக்கு காவல்துறையினர் அனுமதி வழங்காததை கண்டித்து, அப்பகுதி பொதுமக்கள் சர்ச் வளாகத்தில் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கபடி போட்டிக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் ஏற்பட்ட அதிருப்தியில், ஏராளமான பொதுமக்கள் வக்கம்பட்டியில் உள்ள சர்ச் வளாகத்தில் குவிந்தனர். தங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், உடனடியாக போட்டிக்கு அனுமதி வழங்க வேண்டும் என்று கோரியும் அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சம்பவம் அறிந்து அப்பகுதிக்கு விரைந்துள்ள காவல்துறையினர் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள், பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். பொதுமக்கள் அமைதி காக்குமாறும், சட்டத்துக்கு உட்பட்டு செயல்படுமாறும் அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பேச்சுவார்த்தையின் முடிவில் போட்டிக்கு அனுமதி கிடைக்குமா அல்லது போராட்டம் தொடருமா என்பது குறித்த அடுத்தகட்ட தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது..
நிர்வாக ஆசிரியர்-பா.விக்னேஷ்பெருமாள்.
திருப்பி அடிக்க திமுக ரெடி....!!!! விரட்டி அடிக்க விஜய் ரெடி..!!! கட்டுரையாளர் பாண்டியராஜ்...!!!
நீதிபதியின் கண்டிப்பு - அருணை தூக்கி அடித்த விஜய்! லஞ்ச ஒழிப்புத் துறைக்கு புதிய தலைவர் - யார் இந்த மகேஸ்வரி. ?
தனக்கு அரசியல் தெரியாது என்பது முதல்வர் விஜய்க்கு தெரியும்...!!! கட்டுரையாளர் மா பாண்டியராஜ்....!!!!
திண்டுக்கல் - கோவை நெடுஞ்சாலையில் டோல்கேட் திறப்பு ! பொதுமக்கள் கடும் எதிர்ப்பு - திறப்பு நிறுத்திவைப்பு!
அதிரடி காட்டும் தேனி எஸ் பி....!!! பொது மக்களிடம் நல்ல வரவேற்பு...!!!