by Vignesh Perumal on | 2025-05-24 11:04 AM
வருமான வரித்துறையின் கூடுதல் ஆணையர் பதவியை ராஜினாமா செய்துள்ள அருண்ராஜ், நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தில் (த.வெ.க.) இணையவுள்ளதாகவும், அவருக்கு இணைப் பொதுச்செயலாளர் அல்லது துணைப் பொதுச்செயலாளர் போன்ற முக்கிய பதவி வழங்கப்பட வாய்ப்புள்ளதாகவும் அரசியல் வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகி உள்ளன.
பீகார் மாநிலத்தில் வருமான வரித்துறை கூடுதல் ஆணையராகப் பணியாற்றி வந்த தமிழகத்தைச் சேர்ந்த அருண்ராஜ், அண்மையில் தனது பதவியை ராஜினாமா செய்தார். அவரது ராஜினாமா குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அருண்ராஜ் இந்திய வருவாய்த்துறை (IRS) அதிகாரியாக இருந்தபோதும், தமிழக வெற்றிக் கழகம் தொடங்கப்பட்ட காலம் முதலே நடிகர் விஜய்க்கு அறிவிக்கப்படாத அரசியல் ஆலோசகராக செயல்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. கட்சியின் கொள்கை வகுத்தல் மற்றும் வியூகங்கள் அமைப்பதில் அவரது பங்கு இருந்ததாகவும், விஜய் நேரடி அரசியலுக்கு வராமல் "பனையூர் அரசியல்" செய்வதற்கு இவரும் ஒரு காரணம் என்றும் சில வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
2026 தமிழக சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள தமிழக வெற்றிக் கழகம் தீவிரமாகத் தயாராகி வரும் நிலையில், அருண்ராஜின் இந்த ராஜினாமா முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. தேர்தல் நெருங்கும் சமயத்தில் ஒரு மூத்த ஐ.ஆர்.எஸ். அதிகாரி மத்திய அரசுப் பணியைத் துறந்து ஒரு புதிய அரசியல் கட்சியில் இணைவது, தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக வெற்றிக் கழகத்தின் சட்டதிட்டங்கள் இன்னும் முழுமையாக வரையறுக்கப்படாத நிலையில், அருண்ராஜுக்கு கட்சியில் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பதவி வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, இணைப் பொதுச்செயலாளர் அல்லது துணைப் பொதுச்செயலாளர் போன்ற பதவிகள் அவருக்கு வழங்கப்பட வாய்ப்புள்ளது. இவரது வருகை, கட்சிக்கு நிர்வாக ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் வலு சேர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சில தகவல்கள், அருண்ராஜ் சேலம் தொகுதியில் இருந்து 2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் போட்டியிட திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கின்றன.
நிர்வாக ஆசிரியர்-பா.விக்னேஷ்பெருமாள்.
திருப்பி அடிக்க திமுக ரெடி....!!!! விரட்டி அடிக்க விஜய் ரெடி..!!! கட்டுரையாளர் பாண்டியராஜ்...!!!
நீதிபதியின் கண்டிப்பு - அருணை தூக்கி அடித்த விஜய்! லஞ்ச ஒழிப்புத் துறைக்கு புதிய தலைவர் - யார் இந்த மகேஸ்வரி. ?
தனக்கு அரசியல் தெரியாது என்பது முதல்வர் விஜய்க்கு தெரியும்...!!! கட்டுரையாளர் மா பாண்டியராஜ்....!!!!
திண்டுக்கல் - கோவை நெடுஞ்சாலையில் டோல்கேட் திறப்பு ! பொதுமக்கள் கடும் எதிர்ப்பு - திறப்பு நிறுத்திவைப்பு!
அதிரடி காட்டும் தேனி எஸ் பி....!!! பொது மக்களிடம் நல்ல வரவேற்பு...!!!