by Vignesh Perumal on | 2025-05-20 11:47 AM
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (மே 20, 2025) சவரனுக்கு ரூ.360 குறைந்துள்ளது. இதனால் நகை வாங்குவோருக்கு இது ஒரு நல்ல செய்தியாக அமைந்துள்ளது. இன்றைய நிலவரப்படி, ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.69,680-க்கும், ஒரு கிராம் தங்கம் ரூ.8,710-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த சில நாட்களாக தங்கம் விலையில் ஏற்ற இறக்கங்கள் நிலவி வந்த நிலையில், நேற்று முன்தினம் (மே 18) சவரன் ரூ.69,760 ஆகவும், கிராம் ரூ.8,720 ஆகவும் மாற்றமில்லாமல் விற்பனை செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து, நேற்று (மே 19) வாரத் தொடக்கத்தில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.280 உயர்ந்து ரூ.70,040 ஆகவும், கிராமுக்கு ரூ.35 உயர்ந்து ரூ.8,755 ஆகவும் விற்பனையானது.
இந்த நிலையில், இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.45 குறைந்து ரூ.8,710 ஆகவும், சவரனுக்கு ரூ.360 குறைந்து ரூ.69,680 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல், வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ.1 குறைந்து ரூ.108-க்கும், ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ.1,000 குறைந்து ரூ.1,08,000-க்கும் விற்பனையாகிறது.
சர்வதேச சந்தையில் தங்கம் விலையின் போக்கு, அமெரிக்க டாலரின் மதிப்பு, மத்திய வங்கிகளின் தங்க இருப்பு போன்ற பல்வேறு காரணிகள் தங்கத்தின் விலையை நிர்ணயிக்கின்றன. தற்போது தங்கம் விலை குறைந்துள்ளது, சுப காரியங்களுக்கு நகை வாங்க திட்டமிட்டிருப்பவர்களுக்கு ஒரு சாதகமான சூழலாகப் பார்க்கப்படுகிறது.
நிர்வாக ஆசிரியர்-பா.விக்னேஷ்பெருமாள்.
இன்ஸ்பெக்டருக்கு அரிவாள் வெட்டு ! சுட்டுப் பிடித்த போலீஸ் !!
அரசு ஊழியர்களுக்கு ஆப்பு ! த வெ க அரசு அதிரடி !!
ATM மையங்களில் கைவரிசை காட்டிய இளம் பெண் கைது! ஸ்கெட்ச் போட்டு தூக்கிய போலீஸ் !!
மெகா போக்குவரத்து மாற்றம் - வாகன ஓட்டிகளே உஷார் !!
மனைவியுடன் கள்ளத்தொடர்பு - எச்சரித்த நண்பன் ! கேட்காத ஆத்திரத்தால் 40 வருட நண்பனை வெட்டிக்கொன்ற கொடூரம் !!