by Vignesh Perumal on | 2025-05-17 12:35 PM
திருவண்ணாமலை மாவட்டம், சேவூர் கிராமத்தில் உள்ள அதிமுக எம்.எல்.ஏவும், முன்னாள் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சருமான சேவூர் ராமச்சந்திரன் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் இன்று (17.05.2025) சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
சேவூர் ராமச்சந்திரன் அதிமுக ஆட்சியில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராக பதவி வகித்தார். தற்போது அவர் ஆரணி சட்டமன்றத் தொகுதி அதிமுக எம்.எல்.ஏவாக உள்ளார். அவர் மீது ஊழல் புகார்கள் எழுந்த நிலையில், லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
சேவூர் கிராமத்தில் உள்ள அவரது வீடு மற்றும் அவரது மகன்களான விஜயகுமார் மற்றும் சந்தோஷ்குமார் ஆகியோரின் வீடுகளிலும் ஒரே நேரத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த சோதனை காலை முதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்த சோதனைக்கான காரணம் மற்றும் கைப்பற்றப்பட்ட பொருட்கள் குறித்த விவரங்கள் விரைவில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சம்பவம் திருவண்ணாமலை மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நிர்வாக ஆசிரியர்-பா.விக்னேஷ்பெருமாள்.
இன்ஸ்பெக்டருக்கு அரிவாள் வெட்டு ! சுட்டுப் பிடித்த போலீஸ் !!
அரசு ஊழியர்களுக்கு ஆப்பு ! த வெ க அரசு அதிரடி !!
ATM மையங்களில் கைவரிசை காட்டிய இளம் பெண் கைது! ஸ்கெட்ச் போட்டு தூக்கிய போலீஸ் !!
மெகா போக்குவரத்து மாற்றம் - வாகன ஓட்டிகளே உஷார் !!
மனைவியுடன் கள்ளத்தொடர்பு - எச்சரித்த நண்பன் ! கேட்காத ஆத்திரத்தால் 40 வருட நண்பனை வெட்டிக்கொன்ற கொடூரம் !!