by Vignesh Perumal on | 2025-05-16 04:47 PM
திருநெல்வேலி மாநகர காவல்துறையினர் ஆன்லைன் செயலி மூலம் பெண் போல பழகி இளைஞரிடம் மோசடி செய்த மூன்று பேரை கைது செய்துள்ளனர்.
சம்பவம் குறித்து காவல்துறையினர் கூறுகையில், நெல்லையைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் Grindr என்ற ஆன்லைன் டேட்டிங் செயலி மூலம் ஒருவருடன் பழகியுள்ளார். அந்த நபர் பெண் போல பேசி இளைஞருடன் நெருக்கமாக பழகியுள்ளார். பின்னர், தனிமையில் சந்திக்க வேண்டும் என்று அந்த இளைஞரை அழைத்துள்ளார்.
இளைஞர் குறிப்பிட்ட இடத்திற்கு சென்றபோது, அங்கு பெண் வேடமணிந்திருந்த நபர் மற்றும் அவரது கூட்டாளிகள் இருவரும் சேர்ந்து இளைஞரை மிரட்டி தாக்கியுள்ளனர். மேலும், அவரிடமிருந்து விலை உயர்ந்த பைக் மற்றும் செல்போன் ஆகியவற்றை வழிப்பறி செய்து கொண்டு தப்பிச் சென்றுள்ளனர்.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட இளைஞர் நெல்லை மாநகர காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், பெண் போல பேசியது ஒரு ஆணும், அவருக்கு உடந்தையாக மேலும் இருவர் இருந்ததும் தெரியவந்தது.
இதனையடுத்து, காவல்துறையினர் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி மோசடியில் ஈடுபட்ட மூன்று பேரையும் கைது செய்தனர். கைதான நபர்களிடமிருந்து வழிப்பறி செய்யப்பட்ட பைக் மற்றும் செல்போன் மீட்கப்பட்டுள்ளன. இந்த சம்பவம் ஆன்லைன் டேட்டிங் செயலிகளை பயன்படுத்தும் இளைஞர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது போன்ற நபர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
நிர்வாக ஆசிரியர்-பா.விக்னேஷ்பெருமாள்.
திருப்பி அடிக்க திமுக ரெடி....!!!! விரட்டி அடிக்க விஜய் ரெடி..!!! கட்டுரையாளர் பாண்டியராஜ்...!!!
நீதிபதியின் கண்டிப்பு - அருணை தூக்கி அடித்த விஜய்! லஞ்ச ஒழிப்புத் துறைக்கு புதிய தலைவர் - யார் இந்த மகேஸ்வரி. ?
தனக்கு அரசியல் தெரியாது என்பது முதல்வர் விஜய்க்கு தெரியும்...!!! கட்டுரையாளர் மா பாண்டியராஜ்....!!!!
திண்டுக்கல் - கோவை நெடுஞ்சாலையில் டோல்கேட் திறப்பு ! பொதுமக்கள் கடும் எதிர்ப்பு - திறப்பு நிறுத்திவைப்பு!
அதிரடி காட்டும் தேனி எஸ் பி....!!! பொது மக்களிடம் நல்ல வரவேற்பு...!!!