by Vignesh Perumal on | 2025-05-11 10:09 AM
அருள்மிகு மருதனார்மடம் ஆஞ்சநேயர் கோவில்
இணுவில் பகுதியில் உள்ள மருதனார்மடம் சந்திக்கு அண்மையில் யாழ்ப்பாணம் காங்கேசந்துறை வீதியை அண்டி அமைந்துள்ளது. பொதுவாக மருதனார்மடம் ஆஞ்சநேயர் கோவில் எனவே அறியப்படுகின்ற போதிலும், இதற்கு வழங்கப்பட்டுள்ள பெயர் "ஸ்ரீ சுந்தர ஆஞ்நேய திருப்பதி தேவஸ்தானம்" ஆகும். சிலர் இதனை மருதர் பெரும்பதி ஆஞ்சநேயர் ஆலயம் எனவும் அழைப்பர். அண்மைக் காலத்தில் நிறுவப்பட்ட இக்கோயில் வளாகத்தினுள் வீதியோரமாக அமைக்கப்படுள்ள மிகப்பெரிய அனுமன் சிலை இக்கோயிலின் சிறப்பு அம்சங்களில் ஒன்றாக விளங்குகின்றது. சி.வினாசித்தம்பி அவர்களின் வழிகாட்டலின் கீழ் தெல்லிப்பழை துர்க்கையம்மன் கோயில் பிரதம குரு இ.சுந்தரேஸ்வர சிவாச்சாரியாரின் முயற்சியால் இக்கோயில் அமைக்கப்பட்டது.
பிரமாண்டமான அனுமன் சிலை: 72 அடி உயர அனுமன் சிலை ஆஞ்சநேயர் கோவிலின் முகப்பில் இருக்கும் அனுமன் சிலையானது மருதனார்மடத்திற்கே அடையாளமாக விளங்குகின்றது. 72 அடி உயரமான இந்த சிலையானது 2013 இன் முற்பகுதியில் நிர்மாணிக்கப்பட்டது.
இது இலங்கையிலேயே மிக பெரிய ஆஞ்சநேயர் சிலையாக கருதப்படுகின்றது. மருதனார்மடத்திற்கு உட்பட்ட பகுதியில் எங்கிருந்து பார்த்தாலும் தெரியக் கூடிய வகையில் இச்சிலை அமைந்துள்ளது.
தேனியில் தீ விபத்து தப்பிய கேரள மாணர்கள...???' போலீசார் விசாரணை...?/
போதையில் வெறிச் செயல்....!!!": போலீசாரும் மனிதர்கள் தானே.....!!!
தேனியில் இலவச அமரர் உறுதி வானம் கிடைக்கவில்லை...!!! கைத்தள்ளு வண்டியில் பிணத்தை எடுத்துச் சென்ற பொதுமக்கள்...!! குரு ஐயப்பன் புகார்
தேனி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பாலியல் தொல்லை கொடுக்கும் ஏ எஸ் ஓ பழனிச்சாமி.....???
சென்னையில் நேர்மையின் பாதை இதழ் வெளியீட்டு விழா...!!!"