by Vignesh Perumal on | 2025-05-04 03:58 PM
செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூர் அருகே அகிலி பகுதியைச் சேர்ந்த ரமேஷ்குமார் என்பவரது மகள் கயல்விழி (வயது 17), நீட் தேர்வு எழுத இருந்த நிலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நடப்பாண்டில் பிளஸ் டூ தேர்வு எழுதிய கயல்விழி, தேர்வு முடிவுக்காக காத்திருந்தார். இதற்கிடையே, இன்று (மே 4, 2025) செங்கல்பட்டு மாவட்டத்தில் 6 இடங்களில் நீட் தேர்வு நடைபெற உள்ள நிலையில், அவரும் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்திருந்தார்.
வழக்கம் போல் நேற்று இரவு தனது படுக்கை அறைக்குச் சென்ற கயல்விழி, இன்று காலை தாம்பரத்தில் நடைபெற இருந்த நீட் தேர்வுக்கு செல்ல வேண்டியிருந்ததால், அவரது தாயார் அதிகாலை 4 மணிக்கு அவரை எழுப்பச் சென்றார். அப்போது கயல்விழி தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
உடனடியாக இது குறித்து மேல்மருவத்தூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மதுராந்தகம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மாணவி கயல்விழி மன உளைச்சல் காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா அல்லது தேர்வு பயத்தின் காரணமாக இந்த விபரீத முடிவை எடுத்தாரா என்பது குறித்து மேல்மருவத்தூர் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இன்று நீட் தேர்வு நடைபெற உள்ள நிலையில், மாணவி தற்கொலை செய்து கொண்டிருப்பது அகிலி கிராமத்தில் பெரும் துயரத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. நீட் தேர்வு காரணமாக மாணவர்கள் சந்திக்கும் மன அழுத்தங்கள் குறித்து பல்வேறு விவாதங்கள் நடைபெற்று வரும் நிலையில், இந்த சம்பவம் மேலும் கவலையை அளிப்பதாக உள்ளது.
தலைமை செய்தியாளர்-பா.விக்னேஷ்பெருமாள்.
ஹார்முஸ் ஜலசந்திக்கு பை.... பை .......! ரூட்டை மாற்றிய இந்தியா !!
பணி புரியும் கிராமத்திலேயே விஏஓ க்கள் தங்க வேண்டும்...!! இல்லை என்றால் புகார் தெரிவிக்கலாம்...!!!
விசாரணை கைதி மரணம் ! உடலை வாங்க மறுப்பு !!
திருப்பி அடிக்க திமுக ரெடி....!!!! விரட்டி அடிக்க விஜய் ரெடி..!!! கட்டுரையாளர் பாண்டியராஜ்...!!!
நீதிபதியின் கண்டிப்பு - அருணை தூக்கி அடித்த விஜய்! லஞ்ச ஒழிப்புத் துறைக்கு புதிய தலைவர் - யார் இந்த மகேஸ்வரி. ?