by Muthukamatchi on | 2025-04-26 09:24 PM
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகில் எம்.புதுப்பட்டி பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு வெள்ளாளர் முன்னேற்ற கழகம் சார்பாக பந்தல் ராஜா ஆழ்ந்த இரங்கல் விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே எம். புதுப்பட்டி பட்டாசுத் தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்தில், 3 பேர் உயிரிழந்த செய்தி அறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன். வெடி விபத்தால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். வெடி விபத்தால் காயமடைந்து 3 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருபவர்கள் விரைவில் பூரண நலம்பெற இறைவனை வேண்டுகிறேன். மேலும், தமிழக அரசு உயிரிழந்தவர்களுக்கு தலா 25 லட்சமும் காயம் அடைந்து மருத்துவமனையில் உள்ளவர்களுக்கு தலா 5 லட்சமும் இழப்பீடாக அறிவிக்க வேண்டும். மேலும் பட்டாசுத் தொழிற்சாலையில் பணிபுரிபவர்கள் அனைவருக்கும் ஒரு பாதுகாப்பான சூழ்நிலை ஏற்பட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வெள்ளாளர் முன்னேற்ற கழகம் சார்பாக வேண்டுகிறேன்
மனைவியிடம் ஆபாச பேச்சு - அடங்காத ஆத்திரம் ! 5 ஆண்டுகள் கழித்து பழி தீர்த்த கொடூரம் !! சில மணிகளில் தூக்கிய போலீஸ் !!!
இன்ஸ்பெக்டருக்கு அரிவாள் வெட்டு ! சுட்டுப் பிடித்த போலீஸ் !!
அரசு ஊழியர்களுக்கு ஆப்பு ! த வெ க அரசு அதிரடி !!
ATM மையங்களில் கைவரிசை காட்டிய இளம் பெண் கைது! ஸ்கெட்ச் போட்டு தூக்கிய போலீஸ் !!
மெகா போக்குவரத்து மாற்றம் - வாகன ஓட்டிகளே உஷார் !!