by Vignesh Perumal on | 2025-04-22 11:42 AM
தேனி மாவட்டம் பெரியகுளத்தில், கூட்டுறவு சங்கங்களின் துணைப் பதிவாளர் அலுவலகம் முன்பு நியாய விலை கடை பணியாளர்கள் சங்கம் சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான நியாய விலை கடை பணியாளர்கள் கலந்து கொண்டு தங்களது பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தின்போது பணியாளர்கள் முன்வைத்த முக்கிய கோரிக்கைகளில் கூறியிருப்பதாவது: "நியாய விலை கடைகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். ஊழியர்களுக்கு பணி நிரந்தரம் வழங்க வேண்டும். பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதில் ஏற்பட்ட குளறுபடிகள் மற்றும் அதனால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். நியாய விலை கடைகள் மூலம் வழங்கப்படும் பொருட்களின் எடையை சரிபார்க்கும் முறையை எளிமையாக்க வேண்டும். ஊழியர்களுக்கு முறையான பணிச் சூழல் மற்றும் அடிப்படை வசதிகள் செய்து தரப்பட வேண்டும்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சங்க நிர்வாகிகள் பேசுகையில், நியாய விலை கடை பணியாளர்கள் குறைந்த ஊதியத்தில் அதிக வேலை பளுவுடன் பணிபுரிந்து வருவதாகவும், அரசு தங்களது கோரிக்கைகளை உடனடியாக பரிசீலித்து நிறைவேற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தினர். மேலும், தங்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படாத பட்சத்தில் தொடர் போராட்டங்களில் ஈடுபட நேரிடும் என்றும் அவர்கள் எச்சரித்தனர்.
இந்த கண்டன ஆர்ப்பாட்டம் பெரியகுளம் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆர்ப்பாட்டத்தின் முடிவில், தங்களது கோரிக்கைகள் அடங்கிய மனுவை கூட்டுறவு சங்கங்களின் துணைப் பதிவாளரிடம் நியாய விலை கடை பணியாளர்கள் சங்கத்தினர் அளித்தனர்.
தலைமை செய்தியாளர்-பா.விக்னேஷ்பெருமாள்.
மனைவியிடம் ஆபாச பேச்சு - அடங்காத ஆத்திரம் ! 5 ஆண்டுகள் கழித்து பழி தீர்த்த கொடூரம் !! சில மணிகளில் தூக்கிய போலீஸ் !!!
இன்ஸ்பெக்டருக்கு அரிவாள் வெட்டு ! சுட்டுப் பிடித்த போலீஸ் !!
அரசு ஊழியர்களுக்கு ஆப்பு ! த வெ க அரசு அதிரடி !!
ATM மையங்களில் கைவரிசை காட்டிய இளம் பெண் கைது! ஸ்கெட்ச் போட்டு தூக்கிய போலீஸ் !!
மெகா போக்குவரத்து மாற்றம் - வாகன ஓட்டிகளே உஷார் !!