by Muthukamatchi on | 2025-04-08 08:41 PM
தேனி மாவட்ட வேளாண்மை பொறியியல் துறையில் உதவி பொறியாளராக பணியாற்றிய இராதாகிருஷ்ணன் அவர்கள் தேனியை சேர்ந்த ரவிச்சந்திரன் என்பவர் நடத்திய சுதர்சன் என்டர்பிரைசஸ் நிறுவனத்தின் விவசாய கருவிகள் விற்பனை நிறுவனத்தின் மூலம் விவசாய பயனாளிகளுக்கு அரசு மூலம் வழங்கப்பட்ட விவசாய உபகரணங்களுக்கான மானிய தொகையினை காசோலை மூலம் விடுவிப்பதற்கு பரிந்துரை செய்ய முதலில் ரூ 25,000/- ரவிச்சந்திரன் அவர்களிடம் 06.03.2015 தேதியன்று கேட்டுள்ளார் பின்னர் அதை குறைத்து ரூ.20,000 /- லஞ்சமாக கேட்டுள்ளார், லஞ்சம் கொடுத்து மானிய தொகைக்கான காசோலையை பெற விரும்பாத ரவிச்சந்திரன் தேனி லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்துள்ளார் அதன் மீது வழக்கு பதிவு செய்த லஞ்ச ஒழிப்பு போலீசார் கடந்த 09.03.2015 ஆம் தேதி புகாதார திரு. ரவிச்சந்திரன் இருந்து ரூ.20,000/- பணத்தை உதவி பொறியாளர் திரு ராதாகிருஷ்ணன் கேட்டு பெற்றபோது லஞ்ச ஒழிப்பு போலீசில் கையும் களவுமாக பிடிபட்டுள்ளார் பின்னர் அந்த வழக்கு தேனி தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று இன்று 08.04.2025 அன்று திரு. ராதாகிருஷ்ணன் குற்றவாளி என தீர்ப்பு வழங்கப்பட்டு அவருக்கு இரண்டு ஆண்டு சிறை தண்டனையும் அபராதம் ரூ 1,000/- விதித்து தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி திரு. சரவணகுமார் அவர்கள் தீர்ப்பளித்துள்ளார் இந்த வழக்கில் லஞ்ச ஒழிப்புத்துறை சார்பாக துணை சட்ட ஆலோசகர் திருமதி. கவிதா அவர்கள் ஆஜராகி உள்ளார்.
பல ஆயிரம் கோடி சொத்து - தொழில் சாம்ராஜ்யத்தில் ஜாம்பவான் ! யார் இந்த ஜெம் வீரமணி ? போலீசில் சிக்கியது எப்படி ?
ஸ்டாலின் IPS மாற்றம் - நேர்மைக்கு கிடைத்த பரிசு ! அதிகாரிக்கு அளிக்கப்பட்ட அநீதியா? - பின்னணி என்ன ? பின்னணியில் யார் ?
ஒரு கோடி மதிப்பிலான கஞ்சா கடத்தல் - கஞ்சா மற்றும் 2 சொகுசு கார்கள் பறிமுதல், 4 பேர் கைது ! தேனி போலீஸ் அதிரடி !!
"உறவைத் தவிர்த்த கணவர்" - உயிரோடு எரித்து கொலை செய்யப்பட்ட போலீஸ் எஸ்ஐ ! மனைவி கள்ளக்காதலலுடன் சேர்ந்து போட்ட ஸ்கெட்ச் !
மனைவியிடம் ஆபாச பேச்சு - அடங்காத ஆத்திரம் ! 5 ஆண்டுகள் கழித்து பழி தீர்த்த கொடூரம் !! சில மணிகளில் தூக்கிய போலீஸ் !!!