by Vignesh Perumal on | 2025-04-07 09:52 AM
ஜனாதிபதி திரௌபதி முர்மு அரசுமுறை பயணமாக போர்ச்சுகல் மற்றும் சுலோவாகியாவுக்கு செல்கிறார். ஏப்ரல் 7 முதல் 8 வரை அவர் போர்ச்சுகலில் இருப்பார். போர்ச்சுகல் அதிபர் மார்செலோ ரெபெலோ டி சவுசாவின் அழைப்பின் பேரில் அவர் அங்கு செல்கிறார். இந்திய ஜனாதிபதி ஒருவர் போர்ச்சுகலுக்கு 27 ஆண்டுகளுக்குப் பிறகு செல்வது இதுவே முதல் முறையாகும்.
ஏப்ரல் 9 முதல் 10 வரை அவர் சுலோவாகியாவில் இருப்பார். சுலோவாகிய அதிபர் பீட்டர் பெல்லேகிரினியின் அழைப்பின் பேரில் அவர் அங்கு செல்கிறார். இந்திய ஜனாதிபதி ஒருவர் சுலோவாகியாவுக்கு 29 ஆண்டுகளுக்குப் பிறகு செல்வது இதுவே முதல் முறையாகும். சுலோவாகியாவின் நிட்ராவில் உள்ள ஜாகுவார் லேண்ட் ரோவர் ஆலைக்கு செல்ல உள்ளார்.
இந்த பயணங்களின்போது, இரு நாடுகளுடனான இந்தியாவின் உறவுகளை வலுப்படுத்துவது குறித்து ஜனாதிபதி முர்மு பேச்சுவார்த்தை நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இரு நாடுகளின் தலைவர்களையும் அவர் சந்தித்துப் பேசுவார்.
தலைமை செய்தியாளர்-பா.விக்னேஷ்பெருமாள்.
ஒரு கோடி மதிப்பிலான கஞ்சா கடத்தல் - கஞ்சா மற்றும் 2 சொகுசு கார்கள் பறிமுதல், 4 பேர் கைது ! தேனி போலீஸ் அதிரடி !!
"உறவைத் தவிர்த்த கணவர்" - உயிரோடு எரித்து கொலை செய்யப்பட்ட போலீஸ் எஸ்ஐ ! மனைவி கள்ளக்காதலலுடன் சேர்ந்து போட்ட ஸ்கெட்ச் !
மனைவியிடம் ஆபாச பேச்சு - அடங்காத ஆத்திரம் ! 5 ஆண்டுகள் கழித்து பழி தீர்த்த கொடூரம் !! சில மணிகளில் தூக்கிய போலீஸ் !!!
இன்ஸ்பெக்டருக்கு அரிவாள் வெட்டு ! சுட்டுப் பிடித்த போலீஸ் !!
அரசு ஊழியர்களுக்கு ஆப்பு ! த வெ க அரசு அதிரடி !!