by Vignesh Perumal on | 2025-04-06 01:13 PM
மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை தான் சந்திக்கவில்லை என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
சென்னையில் உள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலில் நிர்மலா சீதாராமனை சீமான், அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் முன்னாள் எம்பி கே.சி. பழனிசாமி ஆகியோர் அடுத்தடுத்து சந்தித்ததாக செய்திகள் வெளியாகின. இந்த சந்திப்பின்போது அதிமுகவை மீண்டும் ஒன்றிணைப்பது குறித்து கே.சி. பழனிசாமி கோரிக்கை வைத்ததாகவும் தகவல்கள் பரவின.
இந்நிலையில், தனியார் தொலைக்காட்சிக்கு சீமான் அளித்த பேட்டியில், "நான் நிர்மலா சீதாராமனை சந்தித்து பேசவில்லை" என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி இன்று தமிழகம் வந்துள்ள நிலையில், நிர்மலா சீதாராமன் நடத்திய இந்த அடுத்தடுத்த சந்திப்புகள் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஒரு கோடி மதிப்பிலான கஞ்சா கடத்தல் - கஞ்சா மற்றும் 2 சொகுசு கார்கள் பறிமுதல், 4 பேர் கைது ! தேனி போலீஸ் அதிரடி !!
"உறவைத் தவிர்த்த கணவர்" - உயிரோடு எரித்து கொலை செய்யப்பட்ட போலீஸ் எஸ்ஐ ! மனைவி கள்ளக்காதலலுடன் சேர்ந்து போட்ட ஸ்கெட்ச் !
மனைவியிடம் ஆபாச பேச்சு - அடங்காத ஆத்திரம் ! 5 ஆண்டுகள் கழித்து பழி தீர்த்த கொடூரம் !! சில மணிகளில் தூக்கிய போலீஸ் !!!
இன்ஸ்பெக்டருக்கு அரிவாள் வெட்டு ! சுட்டுப் பிடித்த போலீஸ் !!
அரசு ஊழியர்களுக்கு ஆப்பு ! த வெ க அரசு அதிரடி !!