by Vignesh Perumal on | 2025-04-06 09:28 AM
ஐ.பி.எல்., கிரிக்கெட் போட்டிகள் சார்ந்து அடுத்தடுத்து பல்வேறு புகார்கள் எழுந்த வண்ணமுள்ளன. அதில் மிகவும் கவனிக்கப்பட வேண்டியது கூடுதல் விலைக்கு டிக்கெட் விற்பனை செய்வது. கடந்த முறை நடைபெற்ற தொடரின் போது நுழைவு சீட்டுகள் விநியோகம் செய்யும் இடத்திலேயே கூடுதல் விலை பெற்றதாக ரசிகர்கள் குற்றம் சாட்டினர்.
ஐ.பி.எல். தொடரில் சென்னை சேப்பாக்கத்தில் ஏப்ரல் 5 ஆம் தேதி நடைபெற்ற லீக் போட்டியில் சிஎஸ்கே மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் முதல் பேட்டிங் செய்த டெல்லி அணி 20 ஓவரில் 6 விக்கெட்டை இழந்து 183 ரன்கள் எடுத்தது. டெல்லி தரப்பில் அதிகபட்சமாக கே.எல்.ராகுல் 77 ரன் எடுத்தார். சென்னை தரப்பில் கலீல் அகமது 2 விக்கெட் எடுத்திருந்தார்.
தொடர்ந்து 184 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய சென்னை 20 ஓவரில் 5 விக்கெட்டை இழந்து 158 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் 25 ரன் வித்தியாசத்தில் டெல்லி வெற்றி பெற்றது. சென்னை தரப்பில் அதிகபட்சமாக விஜய் சங்கர் 69 ரன் எடுத்தார். டெல்லி தரப்பில் விப்ராஜ் நிஹாம் 2 விக்கெட் வீழ்த்தினார்.
இச்சூழலில், ஏப்ரல் 5 ஆம் தேதி ஆட்டத்திற்கான நுழைவுச்சீட்டு கள்ளச்சந்தையில் விற்பனை செய்தது தொடர்பாக 11 பேரை காவல்துறையினர் சிறை பிடித்துள்ளனர். இது தொடர்பாக திருவல்லிக்கேணி காவல்துறையினர் 10 வழக்குகள் பதிவு செய்துள்ளனர். மேலும், 34 நுழைவுச்சீட்டுகள் பறிமுதல் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தலைமை செய்தியாளர்-பா.விக்னேஷ்பெருமாள்.
பணி புரியும் கிராமத்திலேயே விஏஓ க்கள் தங்க வேண்டும்...!! இல்லை என்றால் புகார் தெரிவிக்கலாம்...!!!
விசாரணை கைதி மரணம் ! உடலை வாங்க மறுப்பு !!
திருப்பி அடிக்க திமுக ரெடி....!!!! விரட்டி அடிக்க விஜய் ரெடி..!!! கட்டுரையாளர் பாண்டியராஜ்...!!!
நீதிபதியின் கண்டிப்பு - அருணை தூக்கி அடித்த விஜய்! லஞ்ச ஒழிப்புத் துறைக்கு புதிய தலைவர் - யார் இந்த மகேஸ்வரி. ?
தனக்கு அரசியல் தெரியாது என்பது முதல்வர் விஜய்க்கு தெரியும்...!!! கட்டுரையாளர் மா பாண்டியராஜ்....!!!!