by Muthukamatchi on | 2025-04-05 01:36 PM
ஆண்டிபட்டியில் அதிமுக சார்பில் பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்
தேனி கிழக்கு மாவட்டம் ஆண்டிபட்டி கிழக்கு மற்றும் மேற்கு ஒன்றியங்கள், ஆண்டிபட்டி பேரூர் கழகம் சார்பாக பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம் தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.
ஆண்டிபட்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஆண்டிபட்டி கிழக்கு மற்றும் மேற்கு ஒன்றியங்கள் மற்றும் ஆண்டிபட்டி பேரூர் கழகம் சார்பாக புதிய கிளைக் கழக நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டு,அவர்கள் மூலமாக தலா 9 பேர் கொண்ட பூத் கமிட்டி தேர்வு செய்யும் பணிகள் நடைபெற்றன. கூட்டத்திற்கு ஆண்டிபட்டி மேற்கு ஒன்றிய செயலாளர் லோகிராஜன் தலைமை தாங்கினார் .கிழக்கு ஒன்றிய செயலாளர் வரதராஜன், பேரூர் செயலாளர் அருண்மதி கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர் .
கழக கொள்கை பரப்பு துணைச் செயலாளரும்,தேனி கிழக்கு மாவட்ட பூத்கமிட்டி பொறுப்பாளருமான ரதிமீனா சேகர் மற்றும் தேனி கிழக்கு மாவட்ட கழக செயலாளர் முருக்கோடை ராமர்,மதுரை மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் மணிகண்டன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்று பூத் கமிட்டி அமைப்பது தொடர்பான ஆலோசனைகளை வழங்கி ஆய்வு செய்தனர். கூட்டத்தில் ஆண்டிபட்டி மேற்கு மற்றும் கிழக்கு ஒன்றிய , நகர, கிளை கழக ,சார்பு அணி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
நிருபர் பிரவின் ஆண்டிபட்டி தேனி
ஒரு கோடி மதிப்பிலான கஞ்சா கடத்தல் - கஞ்சா மற்றும் 2 சொகுசு கார்கள் பறிமுதல், 4 பேர் கைது ! தேனி போலீஸ் அதிரடி !!
"உறவைத் தவிர்த்த கணவர்" - உயிரோடு எரித்து கொலை செய்யப்பட்ட போலீஸ் எஸ்ஐ ! மனைவி கள்ளக்காதலலுடன் சேர்ந்து போட்ட ஸ்கெட்ச் !
மனைவியிடம் ஆபாச பேச்சு - அடங்காத ஆத்திரம் ! 5 ஆண்டுகள் கழித்து பழி தீர்த்த கொடூரம் !! சில மணிகளில் தூக்கிய போலீஸ் !!!
இன்ஸ்பெக்டருக்கு அரிவாள் வெட்டு ! சுட்டுப் பிடித்த போலீஸ் !!
அரசு ஊழியர்களுக்கு ஆப்பு ! த வெ க அரசு அதிரடி !!