by Vignesh Perumal on | 2025-04-05 12:14 PM
தமிழரின் பாரம்பரிய கடவுள் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் பழனியும் ஒன்று. அதாவது, திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி, சுவாமிமலை, திருத்தணி, பழமுதிர்ச்சோலை. இந்த ஆறு தலங்கள், தமிழ்நாட்டில் அமைந்துள்ளன. தமிழ்ச் சங்க இலக்கியங்களிலும், நக்கீரர் எழுதிய திருமுருகாற்றுப் பறையிலும், அருணகிரிநாதர் எழுதிய திருப்புகழ்களிலும் இந்த ஆறு புனிதத் தலங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.
இதில் மூன்றாவது வீடு பழனி. இந்த படைவீடான பழனியில் தைப்பூசம், பங்குனி உத்திரம் உள்ளிட்ட திருவிழாக்கள் வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. தைப்பூச திருவிழாவில் பாதயாத்திரையாகவும், பங்குனி உத்திர திருவிழாவில் தீர்த்தக்காவடி எடுத்தும் பக்தர்கள் பழனிக்கு வருவது சிறப்பு பெற்றது.
பழனி முருகப்பெருமான் சிலை நவபாஷாணத்தால் உருவானது. எனவே கோடைகாலமான பங்குனி, சித்திரை மாதங்களில் முருகப்பெருமானை குளிர்விக்கும் பொருட்டு, காவிரி ஆற்றில் இருந்து தீர்த்தக்காவடி எடுத்து பக்தர்கள் பழனியாண்டவருக்கு அபிஷேகம் செய்து வழிபாடு நடத்தப்படுகிறது.
இந்த ஆண்டுக்கான பங்குனி உத்திர திருவிழா, பழனி உபகோவிலான திருஆவினன்குடியில் கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது. இதையொட்டி நேற்று இரவு கிராம சாந்தி, வாஸ்து சாந்தி பூஜை, அஸ்திரதேவர் உலா ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இன்று காலை திருஆவினன்குடி கோவிலில் விநாயகர் பூஜை, புண்ணியாக வாஜனம் நடைபெற்றது.
இந்நிலையில் முக்கிய நிகழ்வுகளான திருக்கல்யாணம் வருகின்ற 10 தேதியும் பங்குனி திருத்தேரோட்டமானது 11 தேதியும் நடைபெற உள்ளது. வருகின்ற 14ஆம் தேதி கொடி இறக்குதல் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
நிருபர்கள்-பாலாஜி, கதிரேசன் பழனி.
ஒரு கோடி மதிப்பிலான கஞ்சா கடத்தல் - கஞ்சா மற்றும் 2 சொகுசு கார்கள் பறிமுதல், 4 பேர் கைது ! தேனி போலீஸ் அதிரடி !!
"உறவைத் தவிர்த்த கணவர்" - உயிரோடு எரித்து கொலை செய்யப்பட்ட போலீஸ் எஸ்ஐ ! மனைவி கள்ளக்காதலலுடன் சேர்ந்து போட்ட ஸ்கெட்ச் !
மனைவியிடம் ஆபாச பேச்சு - அடங்காத ஆத்திரம் ! 5 ஆண்டுகள் கழித்து பழி தீர்த்த கொடூரம் !! சில மணிகளில் தூக்கிய போலீஸ் !!!
இன்ஸ்பெக்டருக்கு அரிவாள் வெட்டு ! சுட்டுப் பிடித்த போலீஸ் !!
அரசு ஊழியர்களுக்கு ஆப்பு ! த வெ க அரசு அதிரடி !!