by Vignesh Perumal on | 2025-04-05 10:58 AM
புத்தகம் கட்டுநர் பயிற்சியை நிறைவு செய்த, பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு, அரசு வேலை வழங்குதல் உள்ளிட்ட ஆறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னை காமராஜர் சாலையில் உள்ள, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை தலைமை அலுவலகம் முன், பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள், கடந்த 17ம் தேதி முதல், 10 நாட்களாக தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில் தற்போது மீண்டும் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது: "பல ஆண்டுகளாக பார்வை மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்பட்டு வரும் மாதாந்திர உதவித் பராமரிப்பு தொகையை (DAB) ரூ.1500 இல் இருந்து ரு.5000 ஆக உயர்த்தி வழங்க வேண்டும். உள்ளிட்ட பல நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி பல ஆண்டுகளாக பல போராடி வருகிறோம். எங்களின் நியாயமான கோரிக்கைகள் நிறைவேற்றப்படாதது மிகுந்த ஏமாற்றத்தை அளிக்கிறது.
எனவே மாண்புமிகு தமிழக முதல்வரின் கவனத்திற்கு எங்கள் நியாயமான கோரிக்கைகளை கொண்டு சென்று நிறைவேற்ற வலியுறுத்தி எதிர்வரும் 15/04/2025 அன்று கவனயீர்ப்பு போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளோம். இந்த செய்தியினை அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று பார்வையற்ற சமூகத்தின் முன்னேற்றத்தை உறுதிப்படுத்தமாறு அனைத்து ஊடக நண்பர்களையும் பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு கோடி மதிப்பிலான கஞ்சா கடத்தல் - கஞ்சா மற்றும் 2 சொகுசு கார்கள் பறிமுதல், 4 பேர் கைது ! தேனி போலீஸ் அதிரடி !!
"உறவைத் தவிர்த்த கணவர்" - உயிரோடு எரித்து கொலை செய்யப்பட்ட போலீஸ் எஸ்ஐ ! மனைவி கள்ளக்காதலலுடன் சேர்ந்து போட்ட ஸ்கெட்ச் !
மனைவியிடம் ஆபாச பேச்சு - அடங்காத ஆத்திரம் ! 5 ஆண்டுகள் கழித்து பழி தீர்த்த கொடூரம் !! சில மணிகளில் தூக்கிய போலீஸ் !!!
இன்ஸ்பெக்டருக்கு அரிவாள் வெட்டு ! சுட்டுப் பிடித்த போலீஸ் !!
அரசு ஊழியர்களுக்கு ஆப்பு ! த வெ க அரசு அதிரடி !!