by Vignesh Perumal on | 2025-04-05 10:42 AM
சென்னையில் நேற்று 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,280 வீழ்ச்சி பெற்று, ஒரு சவரன் ரூ.67,200க்கு விற்பனை செய்யப்பட்டது.
பன்னாட்டு சந்தைகளில் முதலீடு செய்வதற்கு தங்கம் ஏற்ற வகையில் இருப்பதனால் அதிக முதலீட்டாளர்கள் தங்கத்தில் முதலீடு செய்ய ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால், தங்கத்தின் விலை அவ்வப்போது அதிகரித்த வண்ணமே காணப்படுகிறது மேலும் தற்போதைய சூழலில் ஆபரணங்களின் பயன்பாட்டில் தங்கம் முதலிடம் பெற்றது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாட்டில் கடந்த மார்ச் 31 ஆம் தேதி காலை நிலவரப்படி, 22 காரட் ஆபரண தங்கம், ஒரு கிராம் 8,425 ரூபாய்க்கும், ஒரு சவரன், 67,400 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. அன்று மாலை நிலவரப்படி, ஒரு கிராம் 8,450 ரூபாய்க்கும், ஒரு சவரன், 67,600 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. ஆனால், ஏப்ரல் 01 தேதி நிலவரப்படி தங்கம் விலை கிராமுக்கு, 60 ரூபாய் அதிகரித்து, ஒரு கிராம் 8,510 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரனுக்கு, 480 ரூபாய் உயர்ந்து, வழக்கத்திற்கு மாறாக, ஒரு சவரன் 68,080 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில், ஏப்ரல் 02 நிலவரப்படி தங்கம் விலையில் எவ்வித மாற்றமில்லை. ஆனால், நேற்று நிலவரப்படி 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,280 வீழ்ச்சி பெற்று, ஒரு சவரன் ரூ.67,200க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் இன்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.720 குறைந்து, ரூ.66,480க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ரூ.8,310க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தங்கம் இதுவரை இல்லாத அளவிற்கு விலையில் உச்சம் கண்டு தற்போது 66 ஆயிரத்தில் நிலைகொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஒரு கோடி மதிப்பிலான கஞ்சா கடத்தல் - கஞ்சா மற்றும் 2 சொகுசு கார்கள் பறிமுதல், 4 பேர் கைது ! தேனி போலீஸ் அதிரடி !!
"உறவைத் தவிர்த்த கணவர்" - உயிரோடு எரித்து கொலை செய்யப்பட்ட போலீஸ் எஸ்ஐ ! மனைவி கள்ளக்காதலலுடன் சேர்ந்து போட்ட ஸ்கெட்ச் !
மனைவியிடம் ஆபாச பேச்சு - அடங்காத ஆத்திரம் ! 5 ஆண்டுகள் கழித்து பழி தீர்த்த கொடூரம் !! சில மணிகளில் தூக்கிய போலீஸ் !!!
இன்ஸ்பெக்டருக்கு அரிவாள் வெட்டு ! சுட்டுப் பிடித்த போலீஸ் !!
அரசு ஊழியர்களுக்கு ஆப்பு ! த வெ க அரசு அதிரடி !!