by Vignesh Perumal on | 2025-04-04 08:45 AM
அதிமுக பொதுச்செயலாளர் பதவிக்கு அவ்வப்போது களங்கம் ஏற்படுத்தும் வகையில் அக்கட்சியில் இருக்கும் முன்னாள் பிரதிநிதிகள் மோதல் போக்கை கடைபிடித்து வருகின்றனர். அவ்வகையில், புரட்சித்தலைவி ஜெ.ஜெயலலிதா அவர்கள் இறப்பை தொடர்ந்து, அக்கட்சியில் மிகவும் முக்கிய பிரமுகர்களாக திகழ்ந்த முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் டிடிவி தினகரன் மற்றும் சின்னம்மா என்று அழைக்கப்பட்ட சசிகலா ஆகியோர் கட்சியிலிருந்து பிரிந்து தனியாக ஓர் அமைப்பை தொடங்கும் அளவிற்கு மோதல் போக்கை உருவாக்கியது.
அவ்வகையில் தற்போது, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடன், அக்கட்சியின் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் மோதல் போக்கை கடைப்பிடித்து வருகிறார். சட்டமன்ற தேர்தலில், அதிமுகவுடன் கூட்டணி அமைக்க பாஜ பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தங்கள் நிபந்தனைகளுக்கு எடப்பாடி இணங்காத பட்சத்தில் கட்சியை உடைக்கவும் முயற்சி செய்து வருகிறது.
கூட்டணி தொடர்பாக எடப்பாடி பழனிசாமியை அமித்ஷா அழைத்துப் உரையாடியுள்ளார். இதேபோல, செங்கோட்டையனும் டெல்லிக்கு சென்று அமித்ஷாவை சந்தித்து உரையாடினார். மேலும், முன்னாள் அதிமுக அமைச்சர்கள், எம்பிக்களும் ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்துப் பேசி வருகிறார்கள். மேலும், ஒன்றிய பாஜ அரசு, செங்கோட்டையனுக்கு ஒய் பிளஸ் பாதுகாப்பு வழங்க இருப்பதாக தெரிகிறது. இந்நிலையில், திருமங்கலம், கள்ளிக்குடி உட்பட மதுரை மாவட்டத்தின் முக்கிய பகுதிகளில், மதுரை மாநகர் மாவட்ட மத்திய தொகுதி அதிமுக செயலாளர் மிசா செந்தில் என்பவரின் பெயரில் நேற்று ஒட்டப்பட்ட போஸ்டர்கள் புதிய பரபரப்பை உருவாக்கியது.
அந்த சுவரொட்டியில், ‘‘அதிமுக பொதுச்செயலாளர் கே.ஏ.செங்கோட்டையன் அவர்களுக்கு ஒய் பிளஸ் பாதுகாப்பு வழங்கிய ஒன்றிய அரசுக்கு நன்றி, நன்றி, நன்றி’’ என குறிப்பிடப்பட்டுள்ளது. இதுதவிர அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா, முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி மற்றும் ராஜன் செல்லப்பா எம்எல்ஏ ஆகியோரது புகைப்படங்கள் சுவரொட்டியில் இடம்பெற்றுள்ளன. அதில் எடப்பாடி பழனிசாமியின் புகைப்படம் இடம்பெறவில்லை.
மதுரை புறநகர் மேற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட திருமங்கலம் சட்டமன்ற உறுப்பினராக ஆர்பி.உதயகுமார் இருந்து வருகிறார். எதிர்க்கட்சி துணைத்தலைவராக இருக்கும் இவர், எடப்பாடி பழனிசாமியுடன் மிகவும் நெருக்கமாக இருக்கிறார். ஆர்பி.உதயக்குமாரின் தொகுதியான திருமங்கலத்திலேயே அதிமுக பொதுச்செயலாளர் என செங்கோட்டையனை குறிப்பிட்டு ஒட்டியுள்ள சுவரொட்டியால் பரபரப்பு உருவாக்கியுள்ளது.
ஒரு கோடி மதிப்பிலான கஞ்சா கடத்தல் - கஞ்சா மற்றும் 2 சொகுசு கார்கள் பறிமுதல், 4 பேர் கைது ! தேனி போலீஸ் அதிரடி !!
"உறவைத் தவிர்த்த கணவர்" - உயிரோடு எரித்து கொலை செய்யப்பட்ட போலீஸ் எஸ்ஐ ! மனைவி கள்ளக்காதலலுடன் சேர்ந்து போட்ட ஸ்கெட்ச் !
மனைவியிடம் ஆபாச பேச்சு - அடங்காத ஆத்திரம் ! 5 ஆண்டுகள் கழித்து பழி தீர்த்த கொடூரம் !! சில மணிகளில் தூக்கிய போலீஸ் !!!
இன்ஸ்பெக்டருக்கு அரிவாள் வெட்டு ! சுட்டுப் பிடித்த போலீஸ் !!
அரசு ஊழியர்களுக்கு ஆப்பு ! த வெ க அரசு அதிரடி !!