by admin on | 2026-05-12 01:08 PM
தேனி மாவட்டத்தில் புகையிலை தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு மேற்கொண்டு வருகின்றனர்.அதன் அடிப்படையில் இதுவரை மொத்தம் 407 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 12,207 கிலோ கிராம் புகையிலை பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைப்பற்றப்பட்ட புகையிலை பொருட்களில் 8,884 கிலோ கிராம் புகையிலை, நீதிமன்ற உத்தரவின்பேரில் தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் B. சினேஹாப்ரியா, இ.கா.ப., அவர்கள் தலைமையில் 09.05.2026 அன்று கொட்டி அழிக்கப்பட்டது.
மேலும், தேனி மாவட்டத்தில் புகையிலைப் பொருட்களின் புழக்கத்தை முற்றிலும் தடுக்கும் நோக்கில், புகையிலை விற்பனை மற்றும் கடத்தல் சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் எச்சரித்துள்ளார்.
#Thenidistrict #thenidistrictpolice #SouthZoneTNpol #TNPolice
கஞ்சா கடத்தலில் முறுக்கு வியாபாரி - சொந்த ஊரில் தொழிலதிபர் ! அலேக்ககாக அள்ளிய ஆந்திரா போலீஸ் !!
கோவையில் லாட்டரி மார்ட்டின் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை !
தமிழ்நாடு அரசு செவிலியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்....!!!
முல்லைப் பெரியாறு அணையில் இருந்து முதல் போக நெல் சாகுபடிக்கு கலெக்டர் வைத்தியநாதன் நீரை திறந்து வைத்தார்...!!!
குற்றப்புலனாய்வுத்துறை தலைமை காவலர், காவல்துறைக்கு திருப்பி அனுப்பப்பட்டார்.....!!!!"