by Vignesh Perumal on | 2026-05-02 02:39 PM
திண்டுக்கல் அருகே அரசு அனுமதியின்றி சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்த இரண்டு பேரை தாலுகா போலீசார் கைது செய்து, அவர்களிடமிருந்து 52 மதுபாட்டில்களைப் பறிமுதல் செய்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் சட்டவிரோத மது விற்பனையைத் தடுக்க மாவட்ட காவல்துறை தீவிர கண்காணிப்புப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, திண்டுக்கல் தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் உலகநாதன் தலைமையில், சார்பு ஆய்வாளர் கிருஷ்ணகுமார் மற்றும் போலீசார் பல்வேறு பகுதிகளில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, வத்தலகுண்டு பைபாஸ் சாலை மற்றும் சிலுவத்தூர் ரோடு ஒத்தக்கடை பேருந்து நிறுத்தம் ஆகிய பகுதிகளில் சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்றிருந்த நபர்களை போலீசார் சோதனையிட்டனர். விசாரணையில், அவர்கள் அரசு அனுமதியின்றி சட்டவிரோதமாக மதுபாட்டில்களைப் பதுக்கி வைத்து விற்பனை செய்தது உறுதி செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, மது விற்பனையில் ஈடுபட்ட குட்டதாவாரம்பட்டியைச் சேர்ந்த முருகேசன் (46), அம்பாத்துரையைச் சேர்ந்த ராஜ்குமார் (33),
ஆகிய இருவரையும் போலீசார் அதிரடியாகக் கைது செய்தனர். அவர்களிடமிருந்து விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 52 மதுபான பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இது குறித்து திண்டுக்கல் தாலுகா போலீசார் வழக்குப் பதிவு செய்து, கைதான இருவரிடமும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். பொது இடங்களில் இடையூறு விளைவிக்கும் வகையிலும், சட்டத்திற்குப் புறம்பாகவும் மது விற்பனை செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரித்துள்ளனர்.
நிர்வாக ஆசிரியர் - பா.விக்னேஷ்பெருமாள்
கஞ்சா கடத்தலில் முறுக்கு வியாபாரி - சொந்த ஊரில் தொழிலதிபர் ! அலேக்ககாக அள்ளிய ஆந்திரா போலீஸ் !!
கோவையில் லாட்டரி மார்ட்டின் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை !
தமிழ்நாடு அரசு செவிலியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்....!!!
முல்லைப் பெரியாறு அணையில் இருந்து முதல் போக நெல் சாகுபடிக்கு கலெக்டர் வைத்தியநாதன் நீரை திறந்து வைத்தார்...!!!
குற்றப்புலனாய்வுத்துறை தலைமை காவலர், காவல்துறைக்கு திருப்பி அனுப்பப்பட்டார்.....!!!!"